காதல் தோல்வியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் விஷமருந்தி தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் குளியாபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
20 வயதான மனோஜ் விஜயங்கன என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குளியாபிட்டிய எழுவபொல, வேவகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் மைதானமொன்றின் அருகேயே விஷமருந்தியுள்ளான்.
தற்கொலைக்கு முன்னர் தனது பேஸ்புக் கணக்கின் ஊடாக தனது முடிவு தொடர்பிலும் தெரிவித்துள்ளான் அவ் இளைஞன். அவரது சடலம் தற்போது மரண பரிசோதனைகளுக்காக குளியாபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.