Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
"வார்த்தை தவறிவிட்டாய் 'தல' " - வேதனையில் தயாரிப்பாளர்

Ajith #A.M.Radnam - "வார்த்தை தவறிவிட்டாய் 'தல' " - வேதனையில் தயாரிப்பாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20,811 Views

 "வார்த்தை தவறிவிட்டாய் 'தல' " - வேதனையில் தயாரிப்பாளர்.

சூப்பர்ஹிட் அடித்த 'தல'யின் வீரம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க "தல56" இல் இணைந்துள்ளதுடன், இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருவதையும், பிரபல இயக்குனர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் என்றும், இந்தப் படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை என்பதும் ஏற்கனவே நாங்கள் சொன்ன விஷயம் தான். சொல்லாத ஒரு விஷயம் இங்கே தான் தொடங்குகின்றது.

 


 "தல56" என்ற இந்தப்படத்திற்கு இதுவரைக்கும் அஜித் நடித்த எந்தப் படத்திற்கும் கிடைக்காத தொகை சம்பளமாகக் கிடைத்திருக்கிறதாம். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இவ்வளவு பெரும் தொகையை சம்பளமாக பேசி கொடுத்திருக்கிறார். இது இப்படியிருக்க, தற்போது படத்திற்கான தயாரிப்புச் செலவு எதிர்பார்த்ததை விட எகிறி நிற்கிறதாம். இந்தநிலையில், செய்ய வேறுவழி இன்றி, அஜித்திற்கு தான் கொடுப்பதாக சொல்லியிருந்த மிகப்பெரும் சம்பளத்தை கொஞ்சம் குறைக்க சம்மதம் கேட்டிருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம்.

 

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் நிலையை புரிந்து கொண்டு, அவரை சமாதானப்படுத்தியதோடு அவரின் அடுத்த படத்திலும் நடித்துத் தருவதாக வாக்கும் கொடுத்திருக்கிறார் 'தல'. அஜித், கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்றுபவர் என்ற நம்பிக்கை உள்ளதால் ஏ.எம்.ரத்னம் அமைதி அடைந்தாராம். அத்தோடு அஜித் கொடுத்த வார்த்தையின் நம்பிக்கையால் "தல56" படத்தயாரிப்பு பணியை முழு வேகத்தில் கவனிப்பதாகவும் சொல்கிறார்கள் படக்குழுவினர்.

 

இது இப்படியிருக்க, ஆரம்பம் வெற்றிப்பட இயக்குனரான விஸ்ணுவர்த்தனிடம் தனக்கான கதை ஒன்றைத் தயார் செய்யுமாறும் அடுத்த படத்தை விஸ்ணுவர்த்தனின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும் அஜித் கேட்டுக்கொண்டதாக கோடம்பாக்க செய்திகள்  இந்நிலையில் அஜீத் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்யும்படி, விஷ்ணுவர்தனிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி ஏ.எம்.ரத்னத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

அஜித்திற்கு தொடர் வெற்றிகளாக அமைந்த படங்களில் “ஆரம்பம்” திரைப்படமும் ஒன்று. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஏ.எம்.ரத்னம் பணியாற்றியிருந்தார். அந்தப் படத் தயாரிப்பின்போது   ஏ.ஏம்.ரத்னத்திற்கும் விஷ்ணுவர்தனுக்கும் இடையில் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் இணைந்து பணியாற்றுவதில்லை. இந்த நிலையில், அஜீத்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவதாக இருந்தால், அந்த படத்தை அவர் தனக்காக தயாரிக்க மாட்டார் என்பதே ஏ.எம்.ரத்னத்தின் இந்தக் கவலைக்குக் காரணம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

எப்படியிருந்தாலும், ஒரு சில காரணங்களால் முரண்பட்டு பிரிந்திருந்த இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜையும், இயக்குனர் கவுதம் மேனனையும்"என்னை அறிந்தால்" படத்தின் மூலம் சேர்ந்து பணியாற்ற வைத்தது போல விஷ்ணுவர்தனையும் ஏ.எம்.ரத்னத்தையும்  ஒன்றாக இணைந்து மறுபடியும் படம் பண்ண வைத்துவிடுவார் நம்ம 'தல' என்கின்றார்கள் அஜீத்தைப் பற்றி நன்கறிந்தவர்கள்.

 

*S .G. R


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top