உலகக் கிண்ண போட்டி சர்ச்சை இல்லாமல் அமைதியாக நடந்து வந்தது. பெரிய அளவில் இந்த போட்டி குறித்த புகார்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. போட்டியிலும் பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது.
ஆனால் நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் பாரபட்சமாக ஆடியதாக புகார் வந்தது. இது சர்ச்சை ஆனது. அதேபோல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணியின் விக்கட் காப்பாளர் தோனி அணிந்திருந்த கையுறை பெரிய சர்ச்சை ஆனது.
தோனி தற்போது இந்திய இராணுவத்தின் கையுறையினை அணிந்து வருகின்றார் இதன் வெளிப்பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும். இதில் பாலிடான் பட்ச் என்ற முத்திரை உள்ளது. இது இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவின் முத்திரை ஆகும். இதன் உள்பக்கம் இந்திய இராணுவத்தின் ஆடை போல வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கும். இவரின் இந்த கையுறை மிகவும் புகழ்பெற்றது.
இந்த கையுறையினை அணிந்துதான் தோனி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கிண்ண போட்டியை விளையாடினார். தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் படையில் லெப்டினன்ட் தரத்தில் இருக்கிறார். இதில் அவர் செய்த பயிற்சியின் காரணமாக இந்த கையுறை வழங்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி இப்படி பட்ச் உள்ள கையுறையினை அணிய கூடாது என்று ஐசிசி தடை போட்டது. தோனியின் இந்த செயல் விதிமுறைக்கு எதிரானது கூறி என்று ஐசிசி இந்த தடையை விதித்தது. ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது என்ற விதியை குறிப்பிட்டு தோனியின் கையுறைக்கு தடை விதித்தது.
இது தொடர்பாக பிசிசிஐ தற்போது ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐசிசி விதியின்படி, ஒரு நாட்டு கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் இது போன்ற சின்னங்களை தங்கள் கையுறைகளில் வீரர்கள் பயன்படுத்த முடியும். இதை சுட்டிக்காட்டி, பிசிசிஐ, தோனிக்கு நாங்கள் அனுமதி வழங்கி இருக்கிறோம் அதனால், அவரது கையுறையினை தடை விதிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறது. இதனால் அடுத்த போட்டியிலும் தோனி பெரும்பாலும் இதே கையுறையுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.