வெங்கட்பிரபு இயக்கத்தில் ஆதவனுக்குப் பின்னர், நயனோடு ஜோடி சேர்ந்து சூர்யா நடித்துவரும் திரைப்படம்
மாஸ் என்கிற மாசிலாமணி. பலராலும் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு திரைப்படமாக இந்தப் படமும் இணைந்துள்ளது.
இப்படத்தில் இரு வேடத்தில் சூர்யா நடிக்கிறார். அத்தோடு, நாளைய தினம் படம் திரைக்கு வருகிறது. இரசிகர்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் படத்தைக் காண காத்திருக்கும் நிலையில், இப்பொழுது படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் படத்தில் சூர்யாவின் பாத்திரம் பற்றி ட்விட் செய்துள்ளார்.
அதாவது, ஒரு சூர்யா நமது ஈழத்தமிழராக நடித்துள்ளார். அது மட்டுமின்றி நமது மொழி வழக்கில் பேசியுள்ளார். இது தமிழ் ஆர்வலர்களையும், ஈழ தமிழர்களையும் பெருமைப்படுத்துகின்ற நோக்கம் என்றாலும், இன்னுமொரு தரப்பு எதிர்ப்பலைகளையும் கிளப்பியுள்ளது.
எத்தனை தடவைகள் தான், உங்களது சுய இலாபத்துக்காகவும், பட விளம்பரத்துக்காகவும் இப்படி ஈழத் தமிழரை சினிமாவில் கற்பழிப்பீர்கள் என்று கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது போலவே, சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், பல விமர்சனங்களை எதிர்கொண்டனர் படக்குழுவினர்!
ஆனாலும், இந்தத் திரைப்படத்தில் எப்படியான ஈழத்தமிழராக சூர்யா வரப்போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆகவே, மாஸ் என்கிற மாசிலாமணி நாளைய தினம் பார்த்துவிட்டு மிகுதி பேசுவோம்.
-கோடம்பாக்கக் குருவி-