வினை விதைத்தவன் வினை அறுப்பான் 'என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் 'அறுவடை'. இத்திரைப்படத்தை எம்.கே. ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். கார்த்திகேசன் தயாரித்துள்ளார். திரைப்படத்தை அவரே இயக்கியது மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக நடித்தும் இருக்கிறார்
இவர் ஏற்கெனவே 'லாரா' திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். அதில் அவர் ஏற்றிருந்த போலீஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது. ஒரு நடிகராக அவர் 'ஒண்டிமுனி' என்கிற திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கவனத்தை பெற்றவர். இத்திரைப்படத்திற்கு பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும் ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார்.
'அறுவடை' திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிந்தைய தொழில்நுட்ப மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இத்திரைப்படத்தை இம்மாதம் வெளியிட திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளது.