9,599 Views
இது தற்கொலையாக இருக்குமென சந்தேகிக்கப்படுவதுடன் , பிரதேச பரிசோதனை இன்றைய தினம் நடைபெறுகின்றது.
இம்மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மாணவன் குடிபோதையில் இருந்த ஒருவரை கேளி செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் மாணவனின் வீட்டுக்கு சென்று சர்ச்சையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து மாணவனின் தந்தை வகுப்பிலிருந்து வந்தவுடன் கவனித்துக்கொள்வதாக மாணவனுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் அம் மாணவன் வீடு திரும்பவில்லையென்பதுடன், பின்னர் சடலமாக ஜிங் கங்கைக் கரையில் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தந்தையின் வார்த்தைகளுக்கு பயந்தமையிலா அம் மாணவன் தற்கொலை செய்துகொண்டான் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.