Army men with weapons - ஆயுதங்களுடன் சிக்கிய இராணுவத்தினர் தொடர்பில் மேலதிக தகவல்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,991 Views
சாதாரண உடையில், கைதுப்பாக்கியை வைத்திருந்த மூன்று இராணுவ சிப்பாய்கள் பயணித்த வேன் ரக வாகனம் தொடர்பில் தற்சமயம் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்புக்களின் போது, ஒன்றுகொன்று முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட இந்த வேன் ரக வாகனத்தில் பயணித்த மூன்று இராணுவ சிப்பாய்களும் இராணுவத்தின் மேஜர் ஜெனரால் ஒருவரின் பாதுகாவலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆயுதம் அவருக்கு சொந்தமானது எனவும் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, இராணுவ சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் இராணுவ சட்டமுறைகளுக்கு அமைய அவர்களுக்கு தராதரம் பாராது கடும் தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை. அரச பாதுகாப்பு அமைச்சின் ஊடக கேந்திரத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர இது தொடர்பில் விளக்கியுள்ளார்.
வேன் ரக வாகனத்தில் பயணித்த இராணுவ சிப்பாய்களிடம் இருந்த துப்பாக்கி மேஜர் ஜெனரால் பிரசன்ன சில்வா 15 வருடங்களாக பயன்படுத்திய கைதுப்பாக்கி என அவர் குறிப்பிட்டார்.
எனினும். இராணுவத்திற்கு சொந்தமான வேன் ரக வாகனத்தில் போலி இலக்க தகடு பொருத்தப்பட்டமை தொடர்பில் இதன்போது, கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, இலக்க தகடு தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக குறிப்பிட்டார்.
இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றில் ஏன் சாதாரண இலக்க தகடு பொருத்தப்பட்டிருந்தது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகமும் பயமும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.