நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் நேற்று மாலை வெளியான நிலையில், மேலதிக ஆசனங்களுடன் கட்சிகள் பெற்றுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டிருந்தது.
இதன்படி, ஐக்கிய தேசிய கட்சி 93 ஆசனங்களை பெற்றதுடன், 13 மேலதிக ஆசனங்களுடன் 106 ஆசனங்களை மொத்தமாக பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 83 ஆசனங்களை பெற்றதுடன், 12 மேலதிக ஆசனங்களுடன் 95 ஆசனங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களை கைப்பற்றியதுடன் 2 மேலதிக ஆசனங்களையும் பெற்றுள்ளது.
இதன்படி, அந்த கட்சிக்கு 16 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
ஜே.வி.பி 4 ஆசனங்களை பெற்றதுடன், மேலதிக 2 ஆசனங்களுடன் 6 ஆசனங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது.
இதுதவிர, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளன.