Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
தொகுதியில் தோல்வி - எனினும் பாராளுமன்றத்துக்கு வருவோர்

Into parliament thought lost in their division - தொகுதியில் தோல்வி - எனினும் பாராளுமன்றத்துக்கு வருவோர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,170 Views
இந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமது தொகுதியில் தோல்வியடைந்த போதும், நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் பலர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட டளஸ் அழகபெரும, மாவட்டத்தில் முதலிடத்தில் தெரிவான போதிலும், அவரின் தொகுதியான மாத்தறையில் தோல்வி அடைந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ச தொகுதி அமைப்பாளரான புத்திகபதிரன, தமது தொகுதியில் தோல்வியுற்ற போதிலும், ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் முதன்மையான பெறுபேறுகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.

சாகல ரத்நாயக்க தெணியாய தொகுதியில் தோல்வியுற்ற போதிலும் அவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

காலி மாவட்டத்தின் பெந்தர – எல்பிட்டிய தொகுதி அமைப்பாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க தமது தொகுதியில் தோல்வியுற்றாலும், இந்த முறை ஐக்கிய  தேசிய கட்சியின் பட்டியலில் முதலாம் இடத்தை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி தொகுதியில் தோல்வியடைந்தாலும், மனுஸ நாணயகார நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம தொகுதி அமைப்பாளரான பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தமது தொகுதியில் தோல்வியுற்றாலும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

பாலித தேவரபெரும புளத்சிங்கள தொகுதியில் தோல்வியடைந்த போதிலும் அவரும் இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மஹரகம தொகுதி அமைப்பாளரான அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தமது தொகுதியில் தோல்வியடைந்தார்.

எனினும் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

கடுவலை தொகுதியில் சுஜிவ சேனசிங்க தோல்வியுற்றாலும் அவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கண்டி மாவட்டத்தின் நாலவப்பிடி தொகுதி அமைப்பாளரான மஹிந்தானந்த அளுத்கமகே தமது தொகுதியில் தோல்வியடைந்த போதிலும், அவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

குண்டசாலை தொகுதி அமைப்பாளரான கெஹலிய றம்புக்வெல்ல தமது தொகுதியில் தோற்றாலும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் வென்னப்புவ தொகுதியில் அருந்திக பெர்னான்டோ தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்டத்தின் ஆணமடுவ தொகுதி அமைப்பாளரான பாலித்த ரங்கே பண்டார தமது தொகுதியில் தோல்வி அடைந்தார். 

எனினும் அவர் மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அநுராதபுரம் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின்அநுராதபுர – மேற்கு தொகுதி அமைப்பாளரான அமைச்சர் பீ.ஹெரிசன் தமது தொகுதியில் தோல்வி அடைந்தாலும் அவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அநுராதபுர கிழக்கு தொகுதி அமைப்பாளரான சாந்தினி பண்டார தமது தொகுதியில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் மொனராகலை தொகுதி அமைப்பாளரான அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார தொகுதியில் தோல்வியடைந்தாலும் அவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ திஸ்சமராம தொகுதியில் தோல்வியடைந்தாலும் அவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
தங்கல்ல தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான திலிப் வெதஆராச்சி தமது தொகுதியில் தோல்வியுற்றாலும் அவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் ரத்திணபுரி மாவட்டத்தின் நிவித்திகல தொகுதியில் தோல்வியுற்ற அந்த தொகுதி அமைப்பாளரான அமைச்சர் தலதா அத்துகோரல நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

பதுளை தேர்தல் தொகுதியில் முதன்மை தொகுதி அமைப்பாளராக இருந்த எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வாவும் தமது தொகுதியில் தோற்ற போதிலும், கட்சியின் சார்பில் அதிக வாக்குகளை பெற்று இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top