Sampur visit of President - காணி விடுவிப்பை இனவாதிகள் பிழையாக பிரசாரம் செய்கின்றனர் - ஜனாதிபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,667 Views
தென்னிலங்கை மக்களை காட்டிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் அதிக நெருக்கடியான நிலைமையில் வாழ்ந்து வருவதை தாம் அறிவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சம்பூரில் காணி உரிமைகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தென்னிலங்கையில் வசிக்கின்ற மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து சலுகைகளும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அத்துடன் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைகொள்ளப்பட்ட பொது மக்களின் காணிகள் படிப்படியாக அவர்களுக்கே திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் போது, அதனை இனவாதிகள் சிலர் தவறான முறையில் பிரசாரம் செய்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இடம்பெயர்ந்த மக்களுக்காக 75 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
அதேநேரம் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இதனையே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தப்பாதிப்புக்கு உள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாழ்வாதாரம், இயல்பு வாழ்க்கை என்பவற்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.