Omanthai checkpoint - இடை நிறுத்தப்பட்ட ஓமந்தை சோதனை சாவடி நடவடிக்கைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,643 Views
தெற்கில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளையே வடக்கிலும் பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர எமது செய்திப்பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.
ஒமந்தை சோதனை சாவடி அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தது.
இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு அவரை தொடர்பு கொண்ட போது, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் சமாதானமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் வடக்கிற்கு தெற்கிற்கும் பாதுகாப்பு வேறுபாடுகளை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
எனவே தெற்கில் இருக்கின்ற பாதுகாப்பு நடைமுறைகளே வடக்கிலும் அமுலாக்கப்படும்.
இதன்படி ஓமந்தை சோதனை சாவடியிலும் இனி அநாவசியமான சோதனைகள் இடம்பெறாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவசியம் ஏற்பட்டால், அந்த சோதனை சாவடி மீண்டும் இயங்கும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.