17,606 Views
பெண்ணொருவரை இளைஞர்கள் இருவர் தாக்கும் காணொளியின் பின்னணி குறித்து நாம் உங்களுக்கு அறியத்தந்திருந்தோம்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண் இது தொடர்பில் இவ்வாறான கருத்தையே வெளியிட்டுள்ளார்.
" இரு வருட த்திற்கு முன் நடந்த சம்பவம். சமூகத்திற்கு பிழையான வகையில் சென்றுள்ளது. பேஸ்புக்கில் பிழையான வித த்தில் போட்டுள்ளனர். நாம் சுற்றுலா சென்றதாக , குளிக்க சென்றதாக, அது பொய். அங்கு சிறிய சண்டையொன்று இடம்பெற்றது. அவ்வளவுதான். அதற்குபின் கதைத்து எல்லோரும் நன்றாக இருந்தோம். இப்போதும் கதைத்து நன்றாக இருக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கையடக்கத்தொலைபேசியை திருத்தும் பொருட்டு கொடுத்த இட த்தில் இருந்தே காணொளி வெளியே வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியில் பெண்ணைத் தாக்கும் இன்னொரு நபர் இனம் தெரியாதோர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவ்விளைஞர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.