3,740 Views
சமுகவலைத்தளங்களின் வளர்ச்சியால் திரைப்படத்துறையினர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
தொடரும் இந்தச்சிக்கலில் தற்போது மாட்டிக்கொண்டிருக்கிறார் உதயநிதி, அவர் அஜித் ரசிகர்களைத் திட்டிவிட்டார் என்கிற என்று சொல்லி அவரை ஏகத்துக்கும் திட்டத்தொடங்கிவிட்டார்களாம். ஒருகட்டத்தில் அவர் அஜித்தைப் பற்றித் தவறாகச் சொல்லிவிட்டார் என்று அது வளர்ந்திருக்கிறது.
இதனால் அஜித் ரசிகர்கள் உதயநிதியைத் திட்டத்தொடங்கிவிட்டனராம். இது டிவிட்டரில் இருந்து இணையதளங்களிலும் செய்தியாக வரத்தொடங்கிவிட்டதாம்.
இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்பதற்காக, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நான் அஜித்தைப் பற்றித் தவறாக எதுவும் சொல்லவில்லை, எனக்கு அவர் மீது மிகுந்த மதிப்பு உண்டு என்று சொன்னதோடு, தவறான செய்திகளைப் பரப்பவேண்டாம் என்று இணையதளங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் உதயநிதி.
என்னைப் பற்றி எந்தச் செய்தியை வெளியிடுவதானாலும் என்னைக் கேட்டுவிட்டு வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.
நன்றி: இந்திய ஊடகம்