2,548 Views
உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆண்களும் இனி பாலியல் பலாத்கார வழக்கு தொடர சீனாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சீனாவில் ஆண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டால் அது ஒரு குற்றமாகவே கருதப்படுவதில்லை. இந்நிலையில், ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு எதிரான கடுமையான சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, ஆண், பெண் யாராக இருந்தாலும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் குறைந்தது 5. ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
மேலும், 14 வயதுக்கு குறைந்த விலைமாதர்களுடன் உறவில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கவும், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் புதியச் சட்டத்தில் வழி செய்யப்பட்டு உள்ளது.