Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
நாடாளுமன்றத்தில் நேற்று

#srilanka #Parliament - நாடாளுமன்றத்தில் நேற்றுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,215 Views
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலாம் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன் போது அமர்வின் ஆரம்பத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருக்கவில்லை என்பது தொடர்பில் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சல் எழுப்பினர்.

பின்னர் சிறிது நேரத்தில் நாடாளுமன்றத்தில் பிரசன்னமான அமைச்சர் ரவி கருணாநாயக்க, கடந்த 11 வருடங்களாக நிதி அமைச்சர் ஒருவர் நாட்டிலேயே இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர், நாட்டில் நிதி அமைச்சர் என்று ஒருவர் இருக்கவில்லை என்று அவர் கூறினார். 

இதற்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்பத்திரன, கடந்த 11 வருடங்களாக நாட்டில் நிதி அமைச்சர் இல்லாத போதும், நாட்டின் அபிவிருத்தி சிறப்பாக இருந்ததாக கூறினார்.

அதேநேரம், ஐக்கிய நாடுகளின் செயற்குழு முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்று தெரிவித்தார். 

திருகோணமலை இரகசிய முகாம் குறித்து ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தது.

ஆனால் முன்னர் அவ்வாறான முகாம்களே இல்லை என்று மறுக்கப்பட்டது.

ஆனால் அங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இருந்து முகாம் ஒன்றே இவ்வாறு கூறப்படுவதாகவும், அதில் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும், யாரும் துன்புறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அங்கு முகாம் ஒன்று இருந்துள்ளமை உறுதியாகி இருக்கிறது.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான இரகசிய முகாம்களை அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே மகிந்த அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

தற்போது உண்மை வெளியாகியுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் பொறுத்தமில்லாத வெளிநாட்டு கொள்கையின் காரணமாக, இலங்கை தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது மலையக மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top