புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட வரி இருசக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு பொருந்தாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தொகை நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரமே என
நிதி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
புகைப்பரிசோதனைக்காக வாகனங்களிடம் அறவிடப்படும் தொகை 5000 ரூபாவாக அதிகரிக்கப்படுமென வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.