27,563 Views
களுபோவில வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியரொருவர் கடந்த மாதம் 30 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தனது வீட்டில் வைத்து தூக்கில் தொங்கி குறித்த பெண் வைத்தியர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.
தலங்கம , கலல்கொட பிரதேசத்தில் வசித்த 36 வயது பெண் வைத்தியரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவருக்கு 7 மற்றும் 4 வயதான இரண்டு மகன்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் கணவரும் வைத்தியர் எனவும் , அவரும் களுபோவில வைத்தியசாலையில் சேவையாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலைக்கு முன்னர் அவர் கடிதமொன்றை எழுதிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் , குழந்தை பெற்றதன் பின்னர் தொடர்ந்த மன உளைச்சலே தற்கொலை முடிவுக்கான காரணமென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.