உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, இலங்கையின் விமானநிலையம் மற்றும் துறைமுகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விசேட ஆய்வு குழு ஒன்றை நியமித்து, விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பவற்றின் பாதுகாப்பை சக்திமயப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளினால் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனால் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையிலேயே குறித்த பாதுகாப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.