Elon Musk, புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில்,ஒரு புதிய யோசனையைத் தனது எக்ஸ் (X) தளத்தில் முன்மொழிந்துள்ளார்.
ஒரு பெரிய, சூரிய சக்தியில் இயங்கும் ஏ.ஐ. செயற்கைக்கோள் கூட்டமைப்பு, பூமிக்கு வரும் சூரிய ஒளியின் அளவை மிகச் சிறியதாகச் சரி செய்வதன் மூலம், புவி வெப்பமயமாதலைத் தடுத்துவிட முடியும் என்று Elon Musk குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுமார் 9,000 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் வானியலாளர்களின் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், Elon Musk இந்தப் புதிய ஏ.ஐ. செயற்கைக்கோள் திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.
சூரிய ஒளியை செயற்கையாக மறைத்து பூமியைக் குளிர்விக்கும் இந்தத் திட்டத்திற்கு
Solar Geoengineering என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.