ஈழ யுத்தம் தொடர்பான திரைப்படம் ஒன்றை மலேசியாவில் காட்சிப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ம் திகதி அவரது வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
விசாரணையின் பின்னர் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு கோரி, 100க்கும் அதிகமான திரைப்பட தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயாரித்துள்ளனர்.