அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயல் குழு உறுப்பினர்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய சந்திப்பின் போது தமது சங்கத்தின் மத்திய செயல் குழு, இந்த முடிவை எடுத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த கருத்தை வாபஸ் பெறுமாறு கோரி மனு ஒன்றில் கையொப்பம் இடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.