Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
22
புலி கூண்டிற்குள் குதித்த சுற்றுலா பயணி: விபரீத சம்பவம்! (காணொளி)

Man jumps into tiger enclosure - புலி கூண்டிற்குள் குதித்த சுற்றுலா பயணி: விபரீத சம்பவம்! (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,470 Views
சீனாவில் உள்ள வனவிலங்கு சரணலாயம் ஒன்றில் சுற்றிப்பார்க்க சென்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் திடீரென புலிக் கூண்டிற்குள் குதித்தார். 

இதை பார்த்து அங்கிருந்த  சரணாலய காவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சீனாவின் ஹேனான் மாகாணத்தில் புகழ்பெற்ற வனவிலங்குகள் சரணலாயம் ஒன்று அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் இந்த சரணலாயம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.

இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்க்க, புலிகள் நடமாடும் பகுதிக்கு மேலே நபர்களை ஏற்றிச்செல்லும் ‘ரோப் கார்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்த ரோப் கார்களில் ஒன்றின் மீது 40 வயதான நபர் ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த ரோப் கார்களுக்கு கீழே,  திறந்து விடப்பட்ட புலிகள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டு இருந்துள்ளது. அப்போது, காரில் அமர்ந்திருந்த அந்த நபர் திடீரென எழுந்து கீழே குதித்துள்ளார். குதித்த வேகத்தில் கீழே கட்டப்பட்டிருந்த வலையில் விழந்ததும் அங்கு சுற்றிக்கொண்டு இருந்த புலிகள் அவரை நோக்கி பாய்ந்து வந்துள்ளன.



மேலும், சில அடிகள் உயரத்தில் இருந்த அந்த நபரை பிடிக்க புலிகள் ஒவ்வொன்றும் போட்டியிட்டு தாவி குதித்தன. இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த சரணாலய காவல்காரர் விரைவாக வந்து ஏணி மூலமாக ஏறி அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "வலையில் குதித்த நபரை காப்பாற்ற சென்றபோது அந்த நபர் ‘நான் இன்னும் சரியாக குதிக்க வில்லை’ என கூலாக பதிலளித்ததாக கூறியது ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த 40 வயதான நபரிடம் விசாரணை நடத்தியபோது, சமர்சால்ட்’ என்ற கலையை கற்று வருவதாகவும், அதனை சிறப்பாக கற்று இருக்கிறேனா என்பதை சுய பரிசோதனை செய்துக்கொள்ளவே புலி கூண்டிற்கு மேலே உள்ள வலையில் குதித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் செயல்பட்ட அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நன்றி: இந்திய ஊடகம் 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top