Lovers' body found - முச்சக்கர வண்டியில் காதல் ஜோடியின் சடலம் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
17,433 Views
உஹனை ஹிமிதுராவ வாவியின் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று காலை காவற்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
43 வயதுடைய ஆண் ஒருவரும் 30 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்துள்ள ஆண் நபர் அம்பாறை அஹயபுரவை சேர்ந்தவர் எனவும் குறித்த பெண் கொலன்னாவ , முல்லேரியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆரம்ப விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இரண்டு சடலங்களும் குறித்த இடத்திலே வைக்கப்பட்டுள்ளதாகவும் , நீதவான் விசாரணை நடைப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.