பாணந்துறை – உயன்கெலே காலி வீதியின் அருகில் உள்ள இரு மாடி வீட்டின் கீழுள்ள மாடியில் இருந்து கடந்த வருடம் மார்ச் மாதம் மீட்கப்பட்ட இரு பெண்களின் எலும்புக் கூடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 13 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டினுள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டது , ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரின் மண்டை ஓடும் மனித எலும்புகளுமாகும்.
குறித்த கொலை தொடர்பான சந்தேக நபர் ஜனவரி முதலாம் திகதி பாணந்துறை காவற்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் குறித்த வீட்டுக்கு திருட சென்றதாகவும் , அப்போது அங்கு இந்த எலும்புக்கூடுகளை பார்த்ததாகவும் , பின்னர் அந்த எலும்பு கூடுகளை புடைவை துணியொன்றினால் மூடி விட்டு குறித்த வீட்டில் உள்ள பொருட்களை திருடியதாக காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபரால் திருடப்பட்ட பொருட்கள் காவற்துறையால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்துள்ளதாகவும் ,குறித்த நபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.