4,240 Views
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகள் பங்கேற்றிருந்த 20க்கு20 கிரிக்கட் போட்டியின் போது, இலங்கை ரசிகர்கள் இசைக்கருவிகளை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதன் காரணமாக பலர் ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இலங்கை ரசிகர்கள் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டை ஆர்வத்தோடும் , உற்சாகத்தோடும் கொண்டாடும் ரசிகர்கள் , இவ்வாறு இடை நடுவே வெளியேற்றப்பட்டமையானது பல்வேறு சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக 20க்கு 20 போட்டிகள் , மற்றைய போட்டிகளை விட உற்சாகம் நிறைந்த தாக கருதப்படுகின்றது.
கொண்டாட்ட த்துக்கு குறைவில்லாத இத்தகைய போட்டிகளின் போது , ரசிகர்கள் வெளியேற்றப்பட்டமையானது அதிர்ச்சிகரமானதென ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் சமூகவலைதளங்கள் ஊடாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.