9,108 Views
பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குப் பின்னர் ஒருவாறு வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றது சிவகார்த்திகேயனின் "ரஜினிமுருகன்".
படம் வெளிவர பல்வேறு தடைகள் ஏற்பட்டும் அனைத்து தடைகளையும் உடைத்துக்கொண்டு வெளியாகி வசூலை வாரிக்குவிப்பதாக சொல்கின்றார்கள் படக்குழுவினர். இருந்தும் 'ஹீரோ' சிவகார்த்திகேயனுக்குக கையைசுட்டுவிட்டதாம் இந்தப் படம்.
வெற்றிப்பட நாயகர்களின் வரிசையில் இடம்பிடிக்க ஒருவாறு தட்டுத்தடுமாறி வழிதேடிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு "ரஜினிமுருகன்" படம் வெளிவந்தால் தன்னுடைய மார்க்கெட் எகிறிவிடும் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அதனாலேயே இந்தப்படத்தை வெளிவரச்செய்வதற்காக தனது நடிப்பிற்கான சம்பளத்தொகை அனைத்தையும் படத்தின் தடைதாண்டலுக்கு செலவிட்டுள்ளாராம் சிவோக்கி.
இந்தநிலையில், சிவகார்த்திகேயன் நினைத்தது போலவே படமும் வெளிவந்து, அவரது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வீணடிக்காமல் சக்கைபோடு போடுவது அவரை சந்தோசத்தின் உச்சிக்கே கொண்டு போயிருக்கின்றது. இதனால் இனிமேல் ஒப்பந்தமாகும் படங்களில் சம்பளத்தைக் கூட்டி, "ரஜினிமுருகன்"இல் விட்ட தொகையை ஈடுகட்ட முடிவுசெய்துள்ளாராம் சிவோக்கி.