23,796 Views
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். அக்ஷய்குமார் ஜோடியாக ‘கிலாடி 786’ படத்தில் நடித்தபோது அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் கையடக்கத்தொலைபேசி நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். கடந்த ஒரு மாதமாக இவர்களின் திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தது.
டெல்லியில் நேற்று அசின்–ராகுல் சர்மா திருமணம் நடந்தது. அசின் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் காலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். மாலையில் நட்சத்திர ஹோட்டலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்கள் கலந்து கொண்டார்கள்.
திருமண வரவேற்பு, வருகிற 23 ஆம் திகதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இதில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்–நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக அசின் முடிவு செய்து இருந்தார். இதற்காக புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இனிமேல் அவர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.