சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தில் நடித்து வருகின்றார் விஜய். படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்ரீ தேவியும் இப்படத்தில் நடிக்கின்றார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை படக் குழுவினருடன் கொண்டாடிய விஜய் அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளார்.
சுமார் 260 பணியாளர்களுக்கு தலா ஒரு தங்க நாணயம் என்ற வீதத்தில் விஜய் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துணை நடிகர், நடிகைகள், வாகனம் ஓட்டுபவர்கள், சமையல்காரர்கள், படப்பிடிப்பு உதவியாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், உதவி இயக்குனர்கள், மற்றும் படப்பிடிப்புடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார் விஜய்.
விஜய் தங்க நாணயம் வழங்கியதும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் விஜய் கையை பிடித்துக் கொண்டு பலர் நன்றி தெரிவித்துள்ளதுடன் அவரை வாழ்த்தியும் உள்ளனர்.
விஜயின் தங்க நாணயத்தை பற்றிதான் இப்போதும் முழு கோடம்பாக்கமும் பேசி வருகின்றதாம்.