2,528 Views
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதாக கருதப்படும் பத்மவிபூஷண் விருதுக்காக நடிகர் அமிதாப்பச்சனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அடுத்து மகிழ்ச்சியில் இருக்கிறார் அமிதாப், அது அப்படி இருக்க மேற்கு வங்காள முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இப்படி ஒரு அறிவிப்பையும் விடுத்திருக்கிறார், அமிதாப்பச்சனுக்கு பத்மவிபூஷண் விருதுக்கு பதிலாக அதை விட உயர்ந்த விருதான பாரத ரத்னா விருத்தி வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமிதாப் தனது டுவிட்டரில் இப்படி சொல்லிருக்கார், "மதிப்புக்குரிய மம்தா அவர்களே எனக்கு கிடைக்கும் இந்த விருதே போதுமானது பாரத ரத்னா விருதுக்கு என்னை தேர்வு செய்யும் அளவுக்கு நான் தகுதியற்றவன் என்றும் இப்போது நாடு தருகின்ற கௌரவம் போதும் என்று அடக்கத்துடன் தெரிவிக்கிறேன்"
இதனால் தான் அமிதாப் இன்னும் 'உயர்ந்த' மனிதராகவே இருக்கிறார்.