Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
16
குழிபறிக்கும் தந்தையால் தவறிப்போகும் வாய்ப்புகள் - கலக்கத்தில் இளையதளபதி...??????????

ilaiya thalapathy vijay Vs S.A.Chandrasegar - குழிபறிக்கும் தந்தையால் தவறிப்போகும் வாய்ப்புகள் - கலக்கத்தில் இளையதளபதி...??????????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

612 Views
குழிபறிக்கும் தந்தையால் தவறிப்போகும் வாய்ப்புகள் - கலக்கத்தில்  இளையதளபதி...??????????

இளையதளபதி விஜய்யின் சினிமா பிரவேசத்திற்கான தடைகொண்ட வழிகளையெல்லாம் பூவால் அமைந்த மெத்தை போன்ற பாதையாக்கிக் கொடுத்தவர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ்சினிமாவில் ஒரு நாயகனாக மேலேறிவர தத்தளித்த தன் தனயனை, அடுத்த “சூப்பர்ஸ்டார்” யார்….? என்ற போட்டியில் இணையவைத்த பெருமையும் இவர் சார்ந்ததே.

இன்று தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற பல நாயகர்கள், தமிழ்சினிமாவில் எந்தவித பின்புலமும் அற்றநிலையில் வந்து ஜொலிக்கின்ற நிலையில், ஒரு இயக்குனராக மட்டுமன்றி, தன் மகனுக்காக தயாரிப்பாளராகவும் மாறி தமிழ்த்திரைவானில் "இளையதளபதி" என்ற பட்டத்தோடு விஜய்யை மின்னவைத்தவரே இந்த எஸ்.ஏ.சந்திரசேகர்.இவ்வாறு மகனை கதாநாயகனாக்கி, "இளையதளபதி" ஆக்கிய தந்தையே இன்று அந்த தளபதிக்கு தலைவலியை கொடுக்க ஆரம்பித்திருப்பதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் "ரூரிங் டாக்கிஸ்" என்ற படம் வெளியாகியிருந்தது. மூன்று விதமான கதைகளைக் கொண்ட இந்தப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு நாயகனாக நடித்திருந்தார். இவ்வாறு வெளியாகி பேசப்பட்ட இந்தப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தொடர்ந்தும் நடிக்கும் ஆசை வந்துவிட்டதாம்.

                        

இதன் காரணமாக, தன் வயசுக்கேற்ற, தோற்றத்துக்கேற்றதான கதைகள் இருந்தால் கொண்டு வருமாறும்,தனக்கு அந்தக் கதை பிடிக்கும் பட்சத்தில் அந்தப்படத்தை தயாரிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் கூறி, திரைத்துறையில் தடம் பதிக்க வாய்ப்புத்தேடும் இளம் இயக்குனர்களிற்கு தூண்டில் போடுவதாகவும் கதைகள்  வெளியாகின்றன.

இது ஒருபுறமிருக்க, நம்ம இளையதளபதிக்குத் தலைவலி கொடுக்கும் வேலையை இங்கே தான் ஆரம்பிக்கிறார் தந்தை எஸ்.ஏ.சி. மிகப்பிரபலமான, பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தமது தயாரிப்பில் விஜய் நடிக்கும் படங்கள் பற்றிப் பேசுவதற்கும், திகதிகளைப் பெறுவதற்கும் அவரைத்தேடி வரும்போது, அவர்களிடம் தன்னை வைத்துப் படம் தயாரிக்குமாறு தொல்லை கொடுக்கின்றாராம். அது மட்டுமல்லாமல் 'அவரை விடுங்க, என்னை வைத்து ஒரு படம் தயாரியுங்கள். இயக்குனரும் கதையும் தயாராகவே உள்ளது' என நேரடியாகவே கேட்கவும் ஆரம்பித்துள்ளதோடு, தான் இயக்கி நடித்த "ரூரிங் டாக்கீஸ்" படத்தையும் வலுக்கட்டாயமாக போட்டுக் காட்டுகின்றாராம்.

இப்படியாக, சந்திரசேகரின் தொல்லை அதிகரித்துக்கொண்டே செல்வதால், விஜய்யை தேடிவரும் தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தப்பித்தால் போதுமென ஒரே ஓட்டமாக  ஓடுகின்றார்களாம். ஏனையவர்களும் விஜய்யை தேடிவரத் தயங்குகின்றார்களாம். இதன் காரணமாக தந்தைக்கும் தனையனுக்குமான பனிப்போர் ஆரம்பித்திருப்பதாகவும் செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன.

                       

நிலைமை இப்படியே போனால், தன் நிலை என்ன ஆகுமோ எனப் பயந்துபோயுள்ள நம்ம இளையதளபதி, இவ்வாறான செயற்பாட்டில் இனியும் ஈடுபடவேண்டாம் என்று தன் தந்தையைக் கண்டித்திருக்கிறார். ஆனால் சந்திரசேகரோ இந்தக் கண்டிப்பிற்கெல்லாம் அசந்ததாகத் தெரியவில்லை. அவரோ ' மகனே...! என்னுடைய படத்தையும், உன்னுடைய படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடுவோம். யார் ஜெயிக்கிறார் என்று பார்ப்போம். நீயா...? நானா..? என்று தான் பார்ப்போமே...' என சவால் விட ஆரம்பித்திருக்கிறார்.

நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தன் தந்தையிடம் எவ்வாறு இந்தப் பிரச்சனையை புரியவைப்பது எனத் தெரியாமல் குழப்பத்திலும், கடுப்பிலும் கிடந்தது தவித்துக் கொண்டிருக்கிறார் நம்ம இளையதளபதி விஜய்.

வீட்டுக்குள்ளேயே வினையா......???
விலக்குவாரா.............? விலகுவாரா...............?
வினாக்களோடு நலன் விரும்பிகள்.

*கணேசமூர்த்தி ராகவன்.

%MCEPASTEBIN%

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top