வல்லவனுக்கு புல்லும் ஆயுதன் என்ற திரைப்படத்துக்கு பிறகு, அதிகமான கதைகளைக் கேட்டும் நடிக்க விரும்பாத நகைச்சுவை நடிகர் சந்தானம் இப்பொழுது ஒரு படத்துக்கு சம்மதம் சொல்லி நாயகனாக நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? நமக்கும்தான்!
நல்ல கதைகள் இல்லாமல், இனி நாயகனாக களமிறங்க மாட்டேன் என்று காத்திருந்தவர் சந்தானம். கிடைக்கும் நகைச்சுவை பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். இயலாத வேலைக்கு ஏன் போவான் என்று இருந்துள்ளார் போலும்!
ஆனாலும், இப்பொழுது கிடைத்த படம் அவருக்கு பிடித்துப் போனதாக கூறப்படுகிறது. அதனால்தான், நடிக்க சம்மதம் வழங்கியுள்ளார். படத்தின் பெயர் இனிமே அப்பிடித்தான் என்பதாகும். படப்பிடிப்புக்களில் பெரும்பாலானவை பாண்டிச்சேரி பகுதியில் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இனிமேல், நகைச்சுவை பாத்திரங்களில் நடிப்பதை குறைத்து நல்ல கதைகள் கிடைத்தால் நாயகனாகவும் கலக்குவேன் என்று நெருங்கியவர்களிடம் கிசுகிசுக்கிறாராம் சந்தானம்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-