கடந்த சில மாதங்களாக தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை எடுத்துவரும் பார்த்தீபன், அதில் வழமை போல தானே நடிக்காமல் முற்று முழுதாக புதுமுகங்களை வைத்து இயக்கி வருகிறார். இது ஏற்கனவே உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்.
படத்துக்கு கதை திரைக்கதை வசனம், இயக்கம் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
ரைட்டு, இப்போ நாங்கள் முக்கியமான விசயத்துக்கு வரலாம்.
இந்தப் படத்தில் பல எதிர்பார்ப்புக்களை பார்த்தீபன் ஏற்படுத்த முயன்று வருகிறார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.
சிம்ரன் பாடுகிறார்...
டாப்சி நடிக்கிறார் என்றெல்லாம் தன் ட்விட்டரில் ஒவ்வொரு நாளும் அப்டேட்டிக் கொண்டிருக்கிறார்.
பல பிரபல நடிகர்களை ஒரு காட்சியில் கொண்டுவந்துள்ள பார்த்தீபன், இன்னொரு படி மேலே போய், நம்ம பிரபுதேவாவையும் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட வைக்க முயற்சித்துள்ளார்.
ஆரம்பத்தில் நடனப்புயலும் ஓகே சொல்லிருந்தாலும், பின்னர் ஹிந்திப் படங்களில் அவர் பிசியாகி விட்டார். பொறுத்துப் பார்த்த பார்த்தீபன்... இது வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொண்டு , பிரபுதேவா இல்லைன்னா என்ன ? அவர விட புதுசா ஒருத்தர போட்டிடலாம் என யோசித்து கொண்டு வந்திருக்கிறார் பாடலுக்கு நடனமாட.
அது அண்மைக்காலமாக எல்லாப் பக்கமாகவும் ஹிட் ஆகிவரும் நம்ம
சிவகார்த்திகேயனை.
இப்பொழுது பார்த்தீபனின் படத்தில் பாடலுக்கு நடனமாட சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்!
இருந்தாலும், பார்த்தீபன் அவர்களே! நீங்க ஒரு தடவை சிவாவிடம் அவருக்குரிய சம்பளத்தைப் பற்றி கேட்டுடுங்க.. இல்லைன்னா சம்பளத் தொகை கேட்டு நீங்க சாய்ஞ்சு போகக் கூடும்.