மனோரம்மாவுக்கு பிறகு, சிறந்த குணச்சித்திர மற்று நகைச்சுவையில் வெளுத்து வாங்கும் நடிகையாக பார்க்கப்படுகின்றவர் நடிகை கோவை சரளா.
கே. பாக்கியராஜ்ஜின் முந்தானை முடிச்சு படத்தில், சிரிப்பு நடிகையாக அறிமுகமானவர்தான் இந்த கோவையை சேர்ந்த சரளா. கடைசியில் கோவையும் அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டது. அவரது நடிப்பும் உடல்மொழியும் இரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில், கோவை சரளா என்னதான் சிரிக்க வைத்தாலும், குணச்சித்திர வேடங்களில் வந்து மனதை உருக வைக்கும் காட்சிகளில் இதுவரை பெரிதாக நடிக்கவில்லையே எனும் கவலை நிறையப் பேருக்கு இருக்கிறது. அந்தக் கவலைக்கு முற்றிடும் முகமாக கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் கொம்பன் படத்தில் கார்த்தியின் அம்மாவாக ஆக்ரோஷமான காட்சிகளில் எல்லாம் சபாஷ் வாங்கியுள்ளார் சரளா.
படத்தில் இறுதிக் காட்சியில், கார்த்தியை பழிவாங்க அனுப்பும் வீர வசனங்களை பேசுபவர் இவர்தான். ''நல்லவன் சாகவும் கூடாது. தப்பானவன் வாழவும் கூடாது'' என கொதித்துப் போகும் ஒரு அம்மாவாக நடித்துள்ளார் கோவை சரளா. இதன் மூலம், அவர் இன்னும் பல அழுத்தமான படங்களை கைப்பற்றிக் கொள்ளுவார் என பலரும் பேசி வருகின்றனர்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-