மர்ம மனிதனாய் விக்ரம்
Vikram# Marma manidhan# Movie - மர்ம மனிதனாய் விக்ரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஐ கொட்டிக் கொடுத்த, கோடி கொடியான வெற்றிகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் சீயான் விக்ரம். மீண்டும் தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆயத்தமாகி விட்டார். அதுவும் ஐ படத்துக்கு செலவழித்தது போல, கிட்டத்தட்ட 2 வருடங்களை இனியும் எந்தப் படங்களுக்கும் வழங்கப் போவதில்லை என தெளிவான முடிவோடு அடுத்த கதையை கேட்டுள்ளார்.
இனி 6 மாத காலம் மட்டுமே ஒரு படத்துக்கு வழங்கும் கால அவகாசமாக இருக்கும் என்றுள்ளார் சீயான். இவர் நடிக்கும் அடுத்த படத்தை அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார்.
படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தற்காலிகமானதா இல்லை நிரந்தரமானதா என்று இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும், இதுவரைக்கும் வந்த தகவல்களின் அடிப்படையில், படத்தின் பெயர் மர்ம மனிதன்.
விக்ரம் படமென்றால் பல மர்மங்களும் ஆச்சர்யங்களும் ஒளிந்து கிடக்கும். இந்தப் படத்தில் என்னென்ன புதுமைகள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-கொண்டு கோடம்பாக்கக் குருவி-