கிரிக்கட் நட்சத்திரம் விராட் கோஹ்லி , நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் ஜோடியாக சுற்றி வருகின்றார்கள். அவர்கள் காதலில் கலந்துருகி இரண்டறக் கலந்து விட்டார்கள் என, சினி உலகம் முழுவதும் பரவலான பேச்சு அடிபடுகிறது. அத்தோடு, இந்தப் பேச்சுக்கு இன்னும் வலுச் சேர்ப்பதாய், இருவரும் இணைந்து விளம்பரப் படங்களிலும் அதிகமாய் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், அனுஷ்கா சர்மா இந்தியில் நடித்துள்ள என்.எச் 10 படம் அண்மையில் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பார்த்ததும் கோஹ்லி தனது காதலியில் நடிப்பைப் பற்றி வெளிப்படையாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
''புத்திசாலித்தனமான என் காதலியின் நடிப்பும் இப்படமும் அற்புதமாக அமைந்துள்ளது'' என பாராட்டியுள்ளார். அதற்க்கு அனுஷ்காவும் நன்றி தெரிவித்து பதிலுக்கு ட்விட் செய்துள்ளார். எனவே, இறுதியில் எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கோஹ்லி அனுஷ்கா காதல் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-