பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பிக்கு மாணவர்கள் ஐந்து பேர் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மூன்று பிக்கு மாணவர்கள் சிகிச்சை பெற்று திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்ற பிக்குமாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.