Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கோச்சடையான் வெளிவர முன்னரே லிங்கா திரைப்படத்தின் ஆயத்தங்கள் எல்லாம் அமர்க்களமாக தொடங்கப்பட்டு, ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.

மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க வேகமான உருவாக்கி வருகிறது லிங்கா. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நம்ம நடிகை அனுஷ்காவும் நடித்து வருவது ஏற்கனவே எல்லோரும் அறிந்த தகவல்.
இப்பொழுது புது தகவல் என்ன என்றால், நம்ம இரசிகர்களுக்கு இந்த விருந்து போதாது என்று ஹாலிவூட் நடிகை ஒருவரையும் லிங்காவில் களம் இறக்கி இருக்கிறார்கள்.


பிரிட்டிஷ் நடிகை லாரென் ஜே எர்வின் (Lauren J Irwin) என்பவர் இதில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க உள்ளார். இவர் வேக்ரே என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தவர் என்பதும் முக்கியமானது.
கவர்ச்சி கதகளி நடிகை இவர் என்பது இன்னொரு கொசுறுத் தகவல்.

மொத்தத்தில் லிங்காவில் நம்ம இரசிகர்கள் திளைக்கப் போகிறார்கள் என்பது மட்டும் இப்போதே புரிகிறது.
1,005 Views
இணையவாசிகளின் விருப்பத்தெரிவான கூகிள் வித்தியாசங்களின் பிறப்பிடம்..
புதுமைகளை உருவாக்கி உலா வரவிடும் ஒரு மஜிக் நிறுவனம்.

உலகில் பல்வேறு பட்ட கார்களை தயாரிக்கின்ற நிறுவனங்கள் உள்ள நிலையில், கூகிள் நிறுவனமும் தனது புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றியடைந்துள்ளது.

ஏனைய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான கார்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல், தனது வழமையான புதுமைப் படைப்புக்களின் பாணியிலேயே தனக்கென தனியான ஒரு பாணியில், தாமே சுயமாக பயணிக்கக்கூடிய வகையில் நவீன வகையிலான கார்களை உற்பத்தி செய்து சாதித்துள்ளது.

இந்த நவீனரக கார்களில் ஓட்டுனர் தேவையில்லை என்பதுவும்
இரண்டு வகையான ஆளிகளே (switches) காணப்படுகின்றமையுமே இதன் சிறப்பு அம்சமாக காணப்படுகிறது.

ஒன்று நகர்வதற்கும் மற்றொன்று நிறுத்துவதற்குமாக பயன்படுத்தப்படுகிறது.
அதேவேளை மற்றைய கார்களை போன்று சுக்கான் (steering) மற்றும் வேகக்கட்டுப்பாட்டு மிதிகள்(accelerators) இவற்றில் பயன்படுத்தப்படவில்லை என்பது முக்கியமான விடயம்.



சாதாரண கார்களைப் போல் மக்களின் பார்வைக்கு கவரத்தக்க வகையிலும், மிகவும் பாதுகாப்பான வகையில், தன்னியக்க முறையில் இயங்கும் தொழில்நுட்பத்தை விரும்பும் மக்களுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த காரில் இரண்டு பேர் மட்டும் பயணிக்க கூடிய வசதி உள்ளதோடு, மணித்தியாலத்துக்கு 40 கிலேமீற்றர் மட்டுப்படுத்தப்பட்ட வேகத்திலேயே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

இந்த கூகுள் கார் தயாரிப்பு திட்டம் பற்றி கலிபோர்னியா மாநாட்டில் அதன் இணை ஸ்தாபகர் சேர்கே பிரின் வெளியிடப்பட்டுள்ளார்.

அடுத்த இரு ஆண்டுகளில் முழு அளவில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரீட்சார்த்தமாக கூகிள் கார்கள் ஓடவிடப்படவுள்ளன.
3,522 Views
நடைபெறும் IPL போட்டிகளில் முதல் சுற்றின் இறுதிப்போட்டியாக இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காகப் பந்துவீசிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் கெவோன் கூப்பரின் சில பந்துகளை வீசிய பந்துவீச்சுப்பாணி 'எறிவதாக' அமைந்திருந்ததாக போட்டி நடுவர்கள் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ராஜஸ்தான் தோற்றிருந்த அந்தப் போட்டியில் கூப்பர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.



இந்த முறைப்பாடு இந்திய கிரிக்கெட் சபையின் விசேட குழுவினால் BCCI Suspect Bowling Action Committee பரிசீலனை செய்யப்படும்.
அதன் பின்னரே முடிவெடுக்கப்படும்.

எனினும் சில பந்துகள் மீதே சந்தேகம் இருப்பதால், அடுத்த ஆண்டின் IPL போட்டிகளில் கூப்பர் தெரிவு செய்யப்பட முடியும்.
ஆனால் மீண்டும் ஒரு முறை முறையிடப்பட்டால் போட்டித்தடைக்கு உடபடுத்தப்படுவார்.
797 Views
தமிழகத்திலுள்ள நாமக்கல்லுக்கு அடுத்த, ரெட்டிபட்டி என்ற கிராமத்தில் நடந்து வரும் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நட்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது.

அதற்கு சிறப்பு அழைப்பாளராக, பிரபல சினிமா இயக்குனர் பாக்கியராஜ்; மற்றும் மச்சான் புகழ் நடிகை நமீதா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இரவு 10.30 மணிக்கு, நமீதா நாடக மேடைக்கு வந்தார்.
அங்கிருந்த ரசிகர்கள் நமீதாவை பார்த்த மகிழ்ச்சியில் முண்டியடித்துக்கொண்டு அவருடனே மேடையில் ஏறினர்.
அதனால் பாரம் தாங்காமல் மேடை ஒருபுறம் சரிந்தது.
மேடையில் அமர்ந்திருந்த, நமீதா, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நமீதா லேசான காயங்களுடன் காரில் ஏறி ஓட்டம் பிடித்தார். விழாவும் ரத்து செய்யப்பட்டது.

இன்னுமா நமீதா மோகம் இருக்கிறது?
1,332 Views
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உலகின் மிகப் பலம் வாய்ந்த மனிதர்.
ஆனால் பழகுவதற்கு இனிமையானவர்; எளிமையானவர்.
 
மக்களோடு மக்களாகப் பழகும்போது ஒரு இயல்பான வேடிக்கை மனிதராகவே மாறிவிடுகிறார்.
 
இதனால் உலகம் முழுதும் ஒபாமாவின் வேடிக்கைப் புகைப்படங்கள் பரவி வருகின்றன.
 
இதோ பல்வேறு கட்டங்களில் ஒபாமாவின் பல்வகை சுவாரஸ்யமான முகபாவங்கள்.

















1,272 Views
பெண்ணுரிமை, ஆண், பெண் சம உரிமை என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருப்போம்..
ஆணுக்கு நிகரான உரிமைகள் பெண்ணுக்கு வேண்டும் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம்.

ஆசிய நாடுகளில் பெண்களுக்கு வீடுகளில் நடக்கும் கொடுமைகள், வன்முறைகள் பற்றித் தினமும் வரும் செய்திகளை அறிந்திருப்போம்.

ஆனால் ஐரோப்பாவில் கதை வேறு..
40% வீட்டு வன்முறைகள் ஆண்கள் மேல் தானாம்.

ஆனால் கொடுமையான விடயம், பெண்களுக்கு வன்முறைகள் இழைக்கப்படும்போது தட்டிக்கேட்க முன்வரும் சமூகம், ஆண்களுக்கு அப்படியான செயல்கள் இழைக்கப்படும்போது கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

உதாரணம் இந்த வீடியோ.



Hidden cameras மூலம் லண்டனில் எடுக்கப்பட்ட இந்தத் திட்டமிட்ட சம்பவத்தின் இரண்டு விதமான செயற்பாடுகளையும் அவதானியுங்கள்.

ஆண்கள் பாவம்.​
953 Views
உலகின் 2வது பணக்கார நடிகராக ‘King Khan’
என்று அழைக்கப்படும் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் கணிக்கப்பட்டுள்ளதாக ,சர்வதேச நிதியியல் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘The Financial Express’
எனப்படும் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த வரிசையில் ஹொலிவூட்டின் பிரபல நடிகர்களான டொம் குரூஸ்(Tom Cruise), ஜொனி டெப்(Johnny Depp) ஆகியோரையும் பின்தள்ளி ஷாருக்கான் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

ஷாருக்கானை முந்திய ஒரே ஒரு பொலிவூட் நடிகர் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்திருக்கும் ஜெர்ரி சைன்பெல்ட் ஆவார்.
ஜெர்ரி சைன்பெல்டின் மொத்த சொத்து பெறுதியாக 820 மில்லியன் டொலர்களைக் கொண்டிருக்கும் அதே வேளை ஷாருக்கானின் மொத்த சொத்து பெறுதியாக 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றது.
நடிகராக பொலிவூட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் Bollywood Badshah ஷாருக் திரைப்பட தயாரிப்பாளராகவும் IPL கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கட்டா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளராகவும் விளங்குகிறார்.

வரிசைப்படுத்தப்பட்டுள்ள நடிகர்களில் மிக வயது முதிர்ந்தவராக 84 வயதுடைய கிளின்ட் ஈஸ்ட்வூட்(Clint Eastwood) உள்ளார். இவர் உலக பணக்கார நடிகர்களில் 9வது இடத்திலுள்ளார்.
3,648 Views
ஜீவாவின் ‘யான்’ படத்தின் படப்பிடிப்புசில நாட்களுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நடைபெற்றது .
அங்கு ஜீவாவை தீவிரவாதிகள் சிலர் கடத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை கேள்விப்பட்ட மொராக்கோ போலீஸ், அந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மனத்தில் மொராக்கோ பற்றி ஒரு தவறான கருத்துச் சித்தரிப்பை ஏற்படுத்திவிடும் என கருதி, ஜீவா மற்றும் இயக்குனர் ரவி கே சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

ஒருவழியாக, பொதுமக்களின் உதவியுடன் போலீசிடம் இருந்து விடுபட்ட ஜீவா குழுவினர் , இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். மொராக்கோவில் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அதை சென்னையில் செட் போட்டு படமாக்கியுள்ளார்கள்.

ஏம்பா? இத முதல்லையே பண்ணிருக்கலாமே?
மொராக்கோவே தான் வேணுமா?
965 Views
கோச்சடையான் திரைக்கு 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வருவது உறுதியான நிலையில், இப்போதைக்கு சில முக்கியஸ்தர்களுக்கும் இந்திய பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு படம் பிரத்தியேகக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
ஆனால் விமர்சனங்கள் எவையும் இதுவரை வெளிவரக் காணோம்.

குறைகளோ, கேலிகளோ கூட கோச்சடையானுக்கு விளம்பரங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், 'ரஜினியை சந்தித்த' மோடி மிகப் பெரும் வெற்றியுடன் இந்தியப் பிரதமராகமாறியிருப்பதும் ரஜினி தரப்புக்கு மிகப்பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் முன்பைப்போலவே மீண்டும் வட இந்திய ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் ரஜினியைக் கிண்டல் செய்து 'ரஜினி ஜோக்ஸ்' வலம் வருகின்றன.
வடக்கின் தெற்கு மீதான ஏளனம் மீண்டும் ரஜினியை மையம் வைத்து ஆரம்பித்துள்ளது.

இதில் மிக முக்கியமான பரபரப்பு ஆந்திராவில் தெலுங்குப் படங்களில் ஆரம்பித்து பொலிவூட்டின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராம் கோபால் வர்மா ரஜினி பற்றி கிண்டலடித்துள்ள ட்வீட்.

தமிழிலும் மொழிமாற்றப்பட்ட படங்கள் மூலமாக அறியப்பட்ட ராம் கோபால் வர்மா அடிக்கடி ட்விட்டரில் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்பவர்.
ஆனால் சினிமா ரசிகர்களில் அதிகமானோரால் நேசிக்கப்படும் ரஜினியை மோசமாகக் கலாய்த்து இப்போது சிக்கலில் அகப்பட்டுள்ளார்.

"கோச்சடையானில் எனக்கு இருக்கும் ஒரேயொரு பெரிய பிரச்சினை என்னவென்றால், நான் நேசிக்கும் ரஜினியின் அழகான 'மார்புகளை' 3D தொழினுட்பம் மூலமாக ஏன் பெரிதாக்கிக் காட்டவேண்டும் என்பதே"



இது கடுமையான எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் ரஜினி ரசிகர் தரப்பிலிருந்தும், தமிழ் ரசிகரிடமிருந்தும் சந்தித்தாலும் மறுபக்கம் ஹிந்தி ரசிகர்கள் ஏகத்துக்கு ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை Retweet, share செய்து மகிழ்கிறார்கள்.

ஆனால் ராம் கோபால் தமிழ்நாட்டுப் பக்கம் செல்வதை இனித் தவிர்த்துக்கொள்வது நல்லது.
2,064 Views
சீனா தன்னுடைய அரச இணையத்தளங்களை உளவு பார்க்கின்றது எனவும், தன்னுடைய முக்கியமான பல இரகசியங்கள் தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறது எனவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் சீன இராணுவ அதிகாரிகள் ஐவர் இதனுடன் தொடர்புபட்டிருக்கின்றனர் எனக் கூறியதோடு அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
ஆனால் சீன அரசு இதனை மறுத்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஒரு போதும் நாங்கள் ஈடுபட்டதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறாக ஏன் அமெரிக்கா தம்மேல் பழிசுமத்துகிறது என தெரியவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் இரகசியமான முறையில் நடத்திக்கொண்டிருந்த இணையவழித் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளன.
அமெரிக்கா இவ்வாறாக குற்றம் சுமத்தியதற்கான பின்விளைவுகளை சந்திக்கும் என சீனா தெரிவித்துள்ளது. எனினும் அமெரிக்கா, சீனாவின் இந்நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்காகவா அல்லது ஏதேனும் நாச வேலைகளுக்காகவா என்பது புரியாத புதிராகவே உள்ளது என கூறியுள்ளது.

எது எவ்வாறாயினும் சீனா இணையவழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என்பது உறுதி என நீண்டகாலமாக அமெரிக்கா கூறிவருகின்ற போதிலும் இதற்கான பதிலடியை சீனா இணையவழியாக வழங்குமா என இணைய ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
915 Views
மோடி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய 05 விடயங்கள்.

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி . பட்டி தொட்டி எங்கும் பலரது பேச்சும் இப்போது இந்த நரேந்திர மோடி பற்றியே,

63 வயதான குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த இவர், இந்திய பாராளுமன்றத்தில் தன்னுடைய கன்னி பிரவேசத்தையே "பிரதமர்" என்ற உயரிய கெளரவத்துடனேயே ஆரம்பித்திருக்கின்றமை இன்னொரு சிறப்பம்சமாகும்.இவரது வாழ்க்கை, சாதிக்கத் துடிக்கின்ற இளைஞர்களுக்கு மிக முக்கியமான பாடங்கள் பலவற்றைக் கற்றுத் தருகின்றது.



01.எளிமையான ஆரம்பகாலம்

ஒரு தேநீர் சாலையின் உரிமையாளரின் மகனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த மோடி பிற்கால அரசியலில் அவரது அரசியல் எதிரிகளால் "சாயா வாலா" (தேனீர் விற்பவர்) என்று கேலி செய்யப்பட்டிருந்தார். இந்தக்கேலியையே தனது அரசியல் வெற்றியின் முக்கியமான பலமாகப் பயன்படுத்திக்கொண்டார் மோடி.
தேநீர்ச் சாலைகளிலேயே, மோடியினதும் பாரதிய ஜனதாக்கட்சியினதும் பிரசாரங்கள் புதிய யுத்தியோடு ஆரம்பித்தன. வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக வீடியோ, இன்ரநெட், மொபைல் தொடர்புகளையும் பயன்படுத்தி தேநீர் கடைகளிலேயே தனது ஆரம்ப கட்ட பிரசாரங்களை மோடி முன்னெடுத்தார்.
அங்கு ஆரம்பித்த ஆளுமையான பிரசார உக்தி அதன் பின்னர் சமூக வலைத்தளங்களையும் மிகப்பரந்து பட்ட அளவில் பயன்படுத்துவதற்கு அந்த ஆரம்ப அடித்தளம் மோடியை கிண்டல் செய்தவைகளில் "சாயா வாலா" வார்த்தைகள் தான் .
எந்தவொரு மறைமுக விடயங்களையும் எங்கள் வாழ்வின் வெற்றிகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு இதுவொரு நல்ல உதாரணம்.



02. பழுத்த அரசியல்வாதி
17 வயதில் அவர்களது குல வழக்கப்படி விவாகம் செய்துகொண்ட மோடி (இந்த திருமண விவகாரம் அண்மைய தேர்தல் பிரசாரங்களின் போது தான் பலருக்கு தெரியவந்தது) ஒரு வருடத்திலேயே திருமண வாழ்வில் இருந்து விலகி இந்து சமய விவகாரங்களிலும் சமயத்தோடும் சார்ந்த இந்துத்துவ அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தினார்.
36 வது வயதிலேயே நெருக்கமான இந்துத்துவ இணைப்புக்களை கொண்ட பாரதிய ஜனதாக்கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். படிப்படியாக கட்சிக்குள்ளே தனது கடுமையான உழைப்பினால் முன்னேறிய மோடி 2001 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக முதற்தடவையாக தெரிவுசெய்ப்பட்டார்.
அன்றில் இருந்து ஒரு தடவைதானும் தோற்காமல் 3 தடவைகள் தொடர்ச்சியாக முதலமைச்சராகி மிக நீண்டகாலம் அம்மாநிலத்தின் சேவையாற்றும் மக்கள் சேவகன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத தலைவன் என்கின்ற அங்கீகாரம் கடந்த 13 ஆண்டுகள் மோடிக்கு இருந்தமையே மோடி பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. யினால் முன்மொழியப்பட காரணம் எனலாம்.LK அத்வானி போன்ற மூத்த தலைவர்களை பின்தள்ளி விட்டு இவர் பிரதமர் வேட்பாளராகி இன்று மகுடமும் சூடியிருக்கின்றார்.

03 சர்ச்சைகளின் நாயகன்
மோடிக்கும் சர்ச்சைகளுக்கும், மோடிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் குறைவே இருந்ததில்லை. குஜராத் வன்முறைகள், இந்து முஸ்லீம் கலவரங்கள் ஆகியவற்றில் மோடி நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார் என்று எதிர்க்கட்சிகள் எப்பொழுதுமே விமர்சித்து வந்திருக்கின்றன.
2002 ஆம் ஆண்டு மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் (இதில் அதிகமானவர்கள் முஸ்லீம்கள்) கொல்லப்பட்டபோது மோடி தனது ஆட்சி அதிகாரம் மூலம் அதை தடுத்து நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றுவரை மோடியை விமர்சிப்பவர்களால் மோடி மீது சுமத்தப்பட்டே இருக்கின்றது. ஆனால் மோடி எந்தக் குற்றங்களிலும் தனக்கு நேரடி தொடர்பு இல்லையென்றே மறுத்து வந்திருக்கிறார்.

ஆனால் ஊழல் குற்றங்கள் எதுவும் இல்லாதவர் என்பது கறைபடியாக் கரங்களின் சொந்தக்காரர் என்ற பெருமையையும் அளித்திருக்கிறது.



04. இந்தியாவின் அதிக நம்பிக்கையை வென்றவர்

குஜராத் மாநிலம் கடந்த 10 ஆண்டுகளில் கண்ட அபாரமான அபிவிருத்தியும் வளர்ச்சியும் இந்தியா முழுவதும் ஏற்படும் என்று இந்திய மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். திறந்த பொருளாதாரம் மீது அதிகமான நம்பிக்கை உடையவரான மோடி மிகப்பெரிய நிறுவனங்கள் பலவற்றை ஈர்த்து அவற்றை குஜராத்தில் பாரிய முதலீடுகளை செய்யவைத்திருக்கின்றார். இதேமாதிரி இந்தியாவிற்கும் மோடியினால் சர்வதேச நிறுவனங்கள் பலவற்றை அழைத்துவரும் நிலை கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள் .

மோடி தேர்தலில் வெற்றிபெற இந்தியாவின் பங்குச்சந்தையில் காணப்பட்ட ஆரோக்கியமான முன்னேற்றம் இதற்கான ஒரு சான்றாக கொள்ளலாம்.

05. மோடிக்கும் டெல்லிக்கும் இடையிலான தூரம்

பொதுவாகவே இந்தியப்பிரதமராக வருவோர் இந்தியத் தலைநகர் டெல்லியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ இருந்தவர்களாகவே இருந்திருப்பார்கள்.
மோடியைப் பொறுத்தவரையில் மாநிலத்தை தாண்டிய "தேசிய அரசியலில் ஈடுபட்டதில்லை" இந்த நாடாளுமன்ற தேர்தல் வரை இந்திய தேசிய அரசியலில் மோடி நேரடியாக ஈடுபட்டது கிடையாது.
டெல்லியில் சிறிது காலமும் வசிக்காமல் தன் சொந்த மாநிலத்தில் இருந்து பிரதமர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது அரசியல்வாதி நரேந்திர மோடி .
இதனால் தங்கள் மத்தியில் இருந்து ஒருவர் இந்தியாவை ஆள வந்திருக்கிறார் என்ற பரிவு பெரும்பாலான இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதேவேளை V.P.சிங், நரசிம்மராவ் ,தேவகவுடா ஆகியோரை தொடர்ந்து மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்த ஒருவர் நாட்டை ஆளும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.



இப்படி சாதித்திருக்கின்ற மோடி எதிர்வரும் 26ந் தேதி மாலை 6.00 மணியளவில் தான் பிரதமராக பதவியேற்க உள்ளதாக இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மனிதனது சாதனை வெற்றிகளுக்கு பின்னும் மறைந்திருக்கும் நல்ல விடயங்களை தேடி பார்ப்போம்,முடியுமாயின் நாமும் ஒரு முறை முயன்று பார்ப்போம்.நரேந்திர மோடி போன்று நாட்டை ஆளும் வல்லமை பெறாவிடினும் வெற்றிகளை தேடி செல்லும் நிலைகடந்து ,வெற்றிகள் எங்களையும் தேடி வரும் நிலைக்கு நாமும் வருவோம் என்று நம்பிக்கை கொள்வோம்.

நமோ (நரேந்திர மோடி என்பதன் சுருக்கம்) என்பதையே இந்தியா இப்போது மந்திரமாகப் பார்க்கிறது.
நாம் நம்பிக்கையையே வாழ்க்கையின் தாரக மந்திரமாகக் கொள்வோம்.
7,151 Views
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் நடித்த திரைப்படம் தெனாலிராமன் , பெருத்த லாபத்தை கொடுக்காவிடினும், விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை. அதனால் வடிவேலு புதுத்தெம்புடன் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கியுள்ளார்.

இந்த முறை வடிவேலு தானே தன்னுடைய படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், அவர்களின் பெயரை வைத்தே படத்தை ஒட்டி விடலாமெனவும் முடிவெடுத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.


தெனாலிராமன் படத்தில் வேறு பிரபல ஹீரோயினை நடிக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக கலெக்சன் கூடியிருக்கும் என்று கூறப்பட்டதால், தன்னுடைய அடுத்த படத்தில் பிரபல ஹீரோயினியை தேடி வருகிறார் வடிவேலு.

அவருடைய லிஸ்ட்டில் த்ரிஷா, லட்சுமி ராய், ஸ்ரீதிவ்யா ஆகியோர்களின் பெயர்கள் உள்ளதாக வடிவேலுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் யாராவது ஒருவர் தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டால், அவர்கள் கேட்கும் தொகையை சம்பளமாக கொடுத்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் வைகைப்புயல்.

வடிவேலுவின் ஹீரோயின் வேட்டையால் கோலிவுட்டில் உள்ள பிரபல நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. எங்கே தங்களிடம் வந்து வடிவேல் கேட்டுவிடுவாரோ அதுவே தங்கள் மார்க்கெட்டை இழக்கச் செய்துவிடுமோ என்பது தான் பயத்துக்குக் காரணமாம்.
இதற்குள் நடிகை சமந்தாவுக்கும் தூது விட்டுப் பார்க்கலாம் என்று யாரோ வடிவேலுக்கு கொளுத்திப் போட்டிருக்காங்களாம்.


ஹா ஹா ஹா சிக்கினாங்க அம்மணிகள்
4,303 Views
அஜித்தின் வீரம் மூலமாக மீண்டும் தமிழுக்கு தலைகாட்டிய பால்வெள்ளை அழகி தமன்னாவுக்கு வீரம் ஹிட் அடித்துப் பெருவெற்றியைத் தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய தென் மாநில மொழிகளிலும் தந்தது பெரிய உற்சாகத்தைக் கொடுக்க, ஹிந்தியிலும் அவர் ராசியாகிப் போனார்.

ஹிந்தியில் தமன்னாவைத் தேடி பெரிய வாய்ப்புக்கள் வரும் நேரம், திடீரென அனைவரும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "நண்பேண்டா" படத்தில் ஒற்றைப்பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புக்கு ஓகே சொல்லியிருந்தார்.

இயக்குனர் பல நடிகைகளை முயற்சித்தும் எல்லோரும் கழன்றுகொள்ள தமன்னா மட்டும் ஓகே சொன்னது பலருக்கும் ஆச்சரியம்.

விசாரித்தால் விஷயம் வெளியானது.

ஒரேநாள் படப்பிடிக்கு தமன்னா கேட்டிருப்பது 10 லட்சம் ரூபாயாம்.
அம்மாடி.
ஆனால் இதற்கும் தயாரிப்பு தரப்பு ஓகே சொன்ன படியால் தான் பால் வெள்ளை அழகி சிறு பாத்திரத்துக்கு சம்மதம் சொன்னாராம்.
715 Views
வருவார் வருவார் என்று தமிழக அரசியல் ரஜினிக்காக காத்திருந்தது; காத்திருக்கிறது.

"நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்" என்று பஞ்ச் வசனம் பேசி பொடி போட்டு வைத்தார் சூப்பர் ஸ்டார்.

உலகத்தின் அத்தனை VIPகளும் ட்விட்டரில் கலக்கி, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து, ரசிகர்களோடு நேரடியாக உறவுகளைப் பேணி வரும் இந்த நவீன யுகத்தில் ரஜினியும் ட்விட்டரில் குதிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் திடீரென நேற்று ரஜினி ஒரு சிறு காணொளி அறிவித்தலோடு ட்விட்டரில் களம் இறங்கினார்.
https://twitter.com/superstarrajini

இறங்கியது தான் தாமதம், ரஜினியை ட்விட்டரில் தொடர்வோர் எண்ணிக்கை வினாடி தோறும் வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பது போல, ரஜினியிடமிருந்து வந்த ஒரே ஒரு ட்வீட்டோடு ரசிகர்களினால் ட்விட்டர் அல்லோலகல்லோலப்பட்டது.



இதற்கிடையில் தன்னைத் தொடர்வோர் எல்லோருக்கும் ரஜினியின் ட்விட்டரிலிருந்து , வெளிவர இருக்கும் ​கோச்சடையான படம் பற்றிய விளம்பர ட்வீட் ஒன்று அனுப்பப்பட்டது.




இவ்வாறு 5000க்கும் அதிகமானோருக்கு சென்ற ட்வீட்டுக்கள் பலரையும் என்னடா இது சூப்பர் ஸ்டாரை கோச்சடையான் விளம்பர ட்விட்டர் ஆக்கிட்டாங்களே என்று யோசிக்கும் நேரத்தில் இன்று அவரது ட்விட்டர் தொடர்வோர் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டிய நிலையில் முன்னைய விளம்பர ட்வீட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

சினிமாவில் தனக்கென தனி வழி, தனி ஸ்டைல் உருவாக்கிய ரஜினி ட்விட்டரிலும் தனிப் பாணியில் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய பிரபலங்களில் மிக விரைவாக 1 லட்சம் தொடர்வோரை (Followers) எட்டியவர் என்று நேற்று சாதனை படைத்த ரஜினி இன்னும் சில நாளிலேயே இப்போதைக்கு அதிக ரசிகரைத் தொடர்வோராகக் கொண்டுள்ள

அமிதாப் பச்சன் - 8.62 மில்லியன்
ஷாருக் கான் - 7.52​ மில்லியன் ​
அமீர் கான் - 6.68​ மில்லியன் ​
சச்சின் டெண்டுல்கர் - 4.24​ மில்லியன் ​
சல்மான் கான் - 6.78​ மில்லியன் ​
பிரியங்கா சோப்ரா - 5.97​ மில்லியன் ​
​நரேந்திர மோடி - 3.9 மில்லியன்
தீபிகா படுகோன் - 5.99 மில்லியன்
தோனி - 2.8 மில்லியன்
ஷ்ரேயா கோஷல் - 2.8 மில்லியன் ​
A.R.ரஹ்மான் - 3.9 மில்லியன்
விராட் கோளி - 3.05 மில்லியன்
ஹ்ரிதிக் ரோஷன் - 5.47 மில்லியன்
அக்ஷய் குமார் - 4.73 மில்லியன்

ஆகியோரை முந்திவிடுவார் என்று எதிர்பார்க்கின்றனர்.

தமிழில் அதிக தொடர்வோரைக் கொண்டுள்ள சிலர்...

சித்தார்த் - 1.06 மில்லியன்
ஷ்ருதி ஹாசன் - 1.03 மில்லியன்
தனுஷ் 749000
த்ரிஷா 808000
மாதவன் - 732000
சிம்பு - 310000
சிவ கார்த்திகேயன் - 322000
ஜெயம் ரவி - 273000
அனிருத் - 263000
ஹரிஸ் ஜெயராஜ் - 254000


​இப்போதைக்கு 2 லட்சம் தாண்டியுள்ள ரஜினியின் ட்விட்டர் வளர்ச்சி ட்விட்டரிலும் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கப் போகிறதோ?

உங்கள் சூரியன் வானொலியையும் நீங்கள் ட்விட்டரில் தொடர - ​

https://twitter.com/SooriyanFMlk

948 Views
நம்ம தல அஜித்தினுடைய படங்களில் நடிப்பதற்கு பொலிவூட் ஹீரோக்களிடம் இப்போது போட்டி நிலவுகிறது. அதிகமான தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகும் இந்நிலையில், அஜித் நடிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஆரம்பம் திரைப்படத்தில் நடிக்க , நான் நீ என பொலிவூட் ஹீரோக்களிடம் போட்டி எழுந்துள்ளது.

ஷாருக்கான் மற்றும் இன்னொரு புகழ் பெற்ற ஹிந்தி ஹீரோவான அக்ஷய்குமாரிடையே இப்பொழுது போட்டி நிலவுகின்ற நிலையில், இன்னொரு ஹீரோவும் இந்த கலவர போட்டியில் குதித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, சல்மான் கான் !



ஏற்கனவே, ஆரம்பத்தின் உரிமையை வாங்கி வைத்துள்ள அக்ஷய்குமாரிடம் அதற்கான பட உரிமையை அதிக தொகை கொடுத்தாவது வாங்கி விடுமாறு சல்மான் தன் மனேஜரிடம் கட்டளையிட்டுள்ளராம். ஆனாலும், கீழே வராத அக்ஷய், சில சமயம் அவர் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால் தன நிலையிலிருந்து இறங்கிவர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

என்ன இருந்தாலும், நம்ம ஹீரோவின் ஒரு படத்துக்கு இப்படி பிரபல பொலிவூட் ஹீரோக்கள் மோதிக் கொள்வது பெருமையான விடயம் தான்.

இந்த போட்டியில் இறுதியில் யாருக்கு படம் செல்கிறதோ? பார்க்கலாம்.
அதுசரி ஆரம்பத்தில் இன்னொரு ஹீரோ இருக்கிறாரே அந்த வேடத்தில் யார்?

1,015 Views
[1]      «      1560   |   1561   |   1562      »      [1565]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top