மூன்று வருட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் நடித்த திரைப்படம் தெனாலிராமன் , பெருத்த லாபத்தை கொடுக்காவிடினும், விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை. அதனால் வடிவேலு புதுத்தெம்புடன் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கியுள்ளார்.
இந்த முறை வடிவேலு தானே தன்னுடைய படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், அவர்களின் பெயரை வைத்தே படத்தை ஒட்டி விடலாமெனவும் முடிவெடுத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தெனாலிராமன் படத்தில் வேறு பிரபல ஹீரோயினை நடிக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக கலெக்சன் கூடியிருக்கும் என்று கூறப்பட்டதால், தன்னுடைய அடுத்த படத்தில் பிரபல ஹீரோயினியை தேடி வருகிறார் வடிவேலு.
அவருடைய லிஸ்ட்டில்
த்ரிஷா, லட்சுமி ராய், ஸ்ரீதிவ்யா ஆகியோர்களின் பெயர்கள் உள்ளதாக வடிவேலுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் யாராவது ஒருவர் தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டால், அவர்கள் கேட்கும் தொகையை சம்பளமாக கொடுத்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் வைகைப்புயல்.
வடிவேலுவின் ஹீரோயின் வேட்டையால் கோலிவுட்டில் உள்ள
பிரபல நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. எங்கே தங்களிடம் வந்து வடிவேல் கேட்டுவிடுவாரோ அதுவே தங்கள் மார்க்கெட்டை இழக்கச் செய்துவிடுமோ என்பது தான் பயத்துக்குக் காரணமாம்.
இதற்குள் நடிகை
சமந்தாவுக்கும் தூது விட்டுப் பார்க்கலாம் என்று யாரோ வடிவேலுக்கு கொளுத்திப் போட்டிருக்காங்களாம்.
ஹா ஹா ஹா சிக்கினாங்க அம்மணிகள்