நம்ம தல அஜித்தினுடைய படங்களில் நடிப்பதற்கு பொலிவூட் ஹீரோக்களிடம் இப்போது போட்டி நிலவுகிறது. அதிகமான தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகும் இந்நிலையில், அஜித் நடிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஆரம்பம் திரைப்படத்தில் நடிக்க , நான் நீ என பொலிவூட் ஹீரோக்களிடம் போட்டி எழுந்துள்ளது.
ஷாருக்கான் மற்றும் இன்னொரு புகழ் பெற்ற ஹிந்தி ஹீரோவான அக்ஷய்குமாரிடையே இப்பொழுது போட்டி நிலவுகின்ற நிலையில், இன்னொரு ஹீரோவும் இந்த கலவர போட்டியில் குதித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, சல்மான் கான் !

ஏற்கனவே, ஆரம்பத்தின் உரிமையை வாங்கி வைத்துள்ள அக்ஷய்குமாரிடம் அதற்கான பட உரிமையை அதிக தொகை கொடுத்தாவது வாங்கி விடுமாறு சல்மான் தன் மனேஜரிடம் கட்டளையிட்டுள்ளராம். ஆனாலும், கீழே வராத அக்ஷய், சில சமயம் அவர் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால் தன நிலையிலிருந்து இறங்கிவர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.
என்ன இருந்தாலும், நம்ம ஹீரோவின் ஒரு படத்துக்கு இப்படி பிரபல பொலிவூட் ஹீரோக்கள் மோதிக் கொள்வது பெருமையான விடயம் தான்.
இந்த போட்டியில் இறுதியில் யாருக்கு படம் செல்கிறதோ? பார்க்கலாம்.
அதுசரி ஆரம்பத்தில் இன்னொரு ஹீரோ இருக்கிறாரே அந்த வேடத்தில் யார்?