சீனா தன்னுடைய அரச இணையத்தளங்களை உளவு பார்க்கின்றது எனவும், தன்னுடைய முக்கியமான பல இரகசியங்கள் தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறது எனவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் சீன இராணுவ அதிகாரிகள் ஐவர் இதனுடன் தொடர்புபட்டிருக்கின்றனர் எனக் கூறியதோடு அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
ஆனால் சீன அரசு இதனை மறுத்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஒரு போதும் நாங்கள் ஈடுபட்டதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறாக ஏன் அமெரிக்கா தம்மேல் பழிசுமத்துகிறது என தெரியவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் இரகசியமான முறையில் நடத்திக்கொண்டிருந்த இணையவழித் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளன.
அமெரிக்கா இவ்வாறாக குற்றம் சுமத்தியதற்கான பின்விளைவுகளை சந்திக்கும் என சீனா தெரிவித்துள்ளது. எனினும் அமெரிக்கா, சீனாவின் இந்நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்காகவா அல்லது ஏதேனும் நாச வேலைகளுக்காகவா என்பது புரியாத புதிராகவே உள்ளது என கூறியுள்ளது.
எது எவ்வாறாயினும் சீனா இணையவழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என்பது உறுதி என நீண்டகாலமாக அமெரிக்கா கூறிவருகின்ற போதிலும் இதற்கான பதிலடியை சீனா இணையவழியாக வழங்குமா என இணைய ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.