அஜித்தின் வீரம் மூலமாக மீண்டும் தமிழுக்கு தலைகாட்டிய பால்வெள்ளை அழகி தமன்னாவுக்கு
வீரம் ஹிட் அடித்துப் பெருவெற்றியைத் தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய தென் மாநில மொழிகளிலும் தந்தது பெரிய உற்சாகத்தைக் கொடுக்க, ஹிந்தியிலும் அவர் ராசியாகிப் போனார்.
ஹிந்தியில் தமன்னாவைத் தேடி பெரிய வாய்ப்புக்கள் வரும் நேரம், திடீரென அனைவரும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "நண்பேண்டா" படத்தில் ஒற்றைப்பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புக்கு ஓகே சொல்லியிருந்தார்.
இயக்குனர் பல நடிகைகளை முயற்சித்தும் எல்லோரும் கழன்றுகொள்ள தமன்னா மட்டும் ஓகே சொன்னது பலருக்கும் ஆச்சரியம்.
விசாரித்தால் விஷயம் வெளியானது.
ஒரேநாள் படப்பிடிக்கு தமன்னா கேட்டிருப்பது 10 லட்சம் ரூபாயாம்.
அம்மாடி.
ஆனால் இதற்கும் தயாரிப்பு தரப்பு ஓகே சொன்ன படியால் தான் பால் வெள்ளை அழகி சிறு பாத்திரத்துக்கு சம்மதம் சொன்னாராம்.