பஹ்ரெயினில் இலங்கை பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக மற்றுமொரு இலங்கையருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவருக்கும், கொலை செயதவருக்கும் தகாத தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
தமது மனைவி இல்லாத தருணம் பார்த்து அவரை கொலை செய்ததுடன், அதனை தீவிபத்தாக மாற்ற அவர் முயற்சித்த போதும் அது வெற்றியளித்திருக்கவில்லை.