7,052 Views
சுந்தர்.சி இயக்கத்தில் வினய், சந்தானம், சுந்தர்.சி, ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி ஆகியோர் நடித்த ‘அரண்மனை’ படம் கடந்த வருடம் வெளிவந்தது.
காமெடி கலந்த திகில் படமாக இருந்ததாலோ என்னவோ அரண்மனை படத்தை அனைத்து தப்பினரும் ரசித்தனர்.
அதன் காரணமாக பெரிய வெற்றியடைந்தது – அரண்மனை. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் 2 ஆம் பாகத்தை தற்போது சுந்தர்.சி எடுக்கவிருக்கிறார். ஆம்பள படத்திற்கு பிறகு சுந்தர்.சி. இயக்கும் அரண்மனை-2 படத்திற்கான வேலைகள் கடந்த சில நாட்களாக சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
அரண்மனை 2 படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்த சுந்தர்.சி. தற்போது நட்சத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். அரண்மனை 2 படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிப்பதும், கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதும் பழைய தகவல்.
அரண்மனை 2 படத்தில் காமெடியனாக சூரி நடிக்கிறார்.
வடிவேலுவுக்குப் பிறகு சுந்தர்.சியின் படங்களில் சந்தானம்தான் காமெடியனாக நடித்து வந்தார். அரண்மனை படத்திலும் சந்தானம் நடித்தார். தற்போதைய தகவலின்படி… அரண்மனை-2 படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. அவர் நடிக்க வேண்டிய வேடத்தைத்தான் சூரிக்குக் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.
தன் வெற்றிக்குக் காரணமான இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சியே தன் போட்டியாளரான சூரிக்கு வாய்ப்பு கொடுத்தது சந்தானத்தை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகக் கேள்வி.
=== CASTRO RAHUL ===