தமக்கோ, மனைவிக்கோ, புதல்வர்களுக்கோ அல்லது சகோதரர்களுக்கோ ரகசிய வங்கி கணக்கு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ரகசிய முதலீடுகளோ இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக பதிலளிக்கும் வகையில், அவரஅறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமக்கு எதிராக பொய் பிரசாரம் மற்றும் தந்திரமான யுக்திகள் கையாளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தவர்களுக்கு அமெரிக்க டொலர் 18 பில்லியன் சொத்து உள்ளதாக தகவல்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
அவ்வாறான கருத்துக்கள் மூலம் முற்றிலும் பொய்யான விடயத்தை உண்மை என மக்களுக்கு கூற முயற்சிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிடுகின்ற போது, அதற்கு வெளிநாட்டு செய்தித் தாள்களில் பிரசாரம் செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.