31,022 Views
இசை வெளியீட்டு விழாவில், கெளதம்மேனன், ராஜேஷ்.எம், சிம்பு, ஆர்யா, உதயநிதி, சந்தானம், தம்பிராமைய்யா, நரேன், என பலர் கலந்து கொண்டு பேசினாலும் சிம்புவின் பேச்சு சிம்பதியை ஏற்படுத்துவிட்டது.
அப்படி என்ன பேசினார்?
செலவுக்குப் பணமில்லாமல் கஷ்டப்படுகிறாராம்.
அப்படியா?
ஆமாம்… அவர் பேசியதைக் கேளுங்க….
“ரெண்டு வருசமா நான் நடிச்ச படம் எதுவுமே ரிலீஸ் ஆகலை. அதனால் எந்த விழாவில் நான் கலந்துக்கிறதே இல்லை. கடைசியாக நான் கலந்துக்கிட்ட விழா சந்தானம் நடிச்ச கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தோடு இசை வெளியிட்டு நிகழ்வு தான்.
அதுக்கப்புறம், இப்பதான்…. இனிமே இப்படித்தான் படத்தோடு இசை வெளியிட்டு நிகழ்வு வந்திருக்கேன்.
சந்தானத்தை மன்மதன் படத்துல நான்தான் அறிமுகம் செய்தேன்.
அப்ப நிறைய பேர் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா இந்த பையன்கிட்ட நல்ல திறமை இருக்கு பெருசா வருவான்னு எல்லார்கிட்டேயும் சொல்லி சந்தானத்தை நடிக்க வச்சேன். இப்ப சந்தானம் பெருசா வளர்ந்து நிக்கிறாரு. சந்தோசமா இருக்கு. இந்த உலகத்துல தட்டிவிட நிறையபேர் இருக்காங்க, ஆனா தட்டிக்கொடுக்கத்தான் ஆளில்லை. ரெண்டு வருசமா என் படம் எதுவுமே ரிலீஸ் ஆகாததால ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அதனாலதான் கடவுளைத் தேடிப்போனேன். சின்ன வயசுல இருந்தே நான் ககஸ்டமென்றால் என்னவென்று தெரியாது வளர்ந்தேன். ஆனா இந்த ரெண்டு வருசத்துல ஒரு சாதாரணமான மனுசனா இருந்து எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டேன். நான் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எங்க அம்மாகிட்டதான் கொடுப்பேன். ஆனா இப்ப என்னால அவங்களுக்கு பணம் கொடுக்க முடியல. அவங்கிட்ட செலவுக்கு பணம் கேட்கவே கஷ்டமா இருக்கு.
இந்த நேரத்துல எனக்கு ஒரு நடிகையோட காதல் வந்தது. ஆனா அவளும் என்னோட கஷ்டகாலத்தைப் பார்த்துட்டு விட்டுவிட்டு போயிட்டா. ஏற்கனவே எனக்குள் இருந்த கஷ்டம் மட்டுமில்லாம, காதலியும் விட்டுட்டு போன கஷ்டம் என்னை ரொம்ப வருத்தி எடுத்தது. கடவுள் கஷ்டத்தை கொடுத்து நம்மள டெஸ்ட் பண்றான்னு நினைச்சேன். எல்லாமே போயி எங்கிட்ட உயிர் மட்டும்தான் இருந்தது.
அப்பத்தான் கெளதம்மேனன் ஒரு படத்துல நடிக்க கூப்பிட்டாரு. போய் நடிச்சிக்கிட்டிருந்தப்ப, தல அஜித் படம் இயக்குற வாய்ப்பு அவருக்கு வந்தது. அப்ப என்னை விட எங்க அப்பாதான் ரொம்ப ஃபீல் பண்ணினாரு. அவர் இருந்த சூழ்நிலையில் அஜித் படம் இயக்கிறதையே பெருசா நினைச்சார். நானும் விட்டுக்கொடுத்தேன். அஜித் கூட அப்பாகிட்ட உங்க பையன் நல்லா வருவான் ஃபீல் பண்ணாதீங்கன்னு சொன்னாரு.
அந்த நேரத்துல என்னோட சோகம் இன்னும் அதிகமானது. அப்பத்தான் நமக்காக வாழுறதை விட மற்றவங்களுக்காக வாழுறதுன்னு முடிவெடுத்தேன். இந்த ரெண்டு வருசத்துல மீடியா என்னைப்பத்தி நிறைய எழுதினாங்க.
ஒரு படம்கூட வெளியாகாத நிலையில என்னைப்பற்றி ஏதாச்சும் செய்தி எழுதிக்கிட்டே இருந்ததால அவங்க என்னை தாங்கிப்பிடிச்சாங்கன்னுதான் சொல்லணும். இல்லேன்னா காணாமல் போயிருப்பேன்”
என்று உருக்கமாக சிம்பு பேசிக்கொண்டேப் போக காமெடிப் படத்தின் இசைவெளியீடு சோகமாகிப் போனது.
=== CASTRO RAHUL ===