கர்நாடக உச்ச நீதிமன்றம்
நேரம் காலை 11 மணி
நீதிபதி சி .ஆர் .குமாரசுவாமி அவர்களின் வருகை
அவையில் நிசப்தம் ஆனாலும் மூன்றே நிமிடங்களில் தசாப்தம் தாண்டி தொடர்ந்திட்ட வழக்கிற்கு குமாரசுவாமி முற்றுப்புள்ளி வைகின்றார்.....இது காறும் குற்றம் சுமதப்பட்டவரின் குற்றங்களை நிரூபிக்க அரச தரப்பு தவறிவிட்டது என்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பையும் இரத்து செய்து குமாரசுவாமி அவர்கள் இந்த வரலாற்று தீர்ப்பினை வழங்குகிறார்
குற்றம் சுமத்தப்பட்ட வாதியின் ஆதரவாளரின் முகங்கள் தனிலே புன்னகை .எதிர்தரப்பினர் தரப்பில் மௌனித்த சலசலப்பு ...
ஆம் இது யாருடைய வழக்கு ??
இது வேருயாருடயதும் அல்லஅம்மா என்று தமிழக மக்களினாள் செல்லாமாய் அழைக்கும் ஜெயலலிதா அவர்களுடைய வழக்கின் தீர்ப்பே இவ்வாறு அமைந்தது ... 18 ஆண்டுகள், பல சர்ச்சைகள், எல்லாவற்றிட்க்கும் வெறும் மூன்றே நிமிடத்தில் முற்றுப்புள்ளி... தீர்ப்பை அறிந்து மூக்கின் மேல் விரல் வைத்தோர் பலர் ..இவ்வழக்கின் பின்னனி என்ன ..உண்மையில் என்ன தான் நடந்தது ..இது சூரியனின் ஒரு சிறப்பு ரிப்போர்ட்
சுப்பிரமணிய சுவாமி இந்திய அரசியலின் நாரதர் வில்லங்க அரசியலின் வித்தகர் இவர் கையில் சிறு துப்புக்கிடைதால் போதும் துவைத்து எடுத்திடுவார் ..பேனையே பெருமாளாக்கும் இவருக்கு பெரும் அம்மாள் பற்றி சிறு துப்புக்கிடைதால் விட்டுவைப்பாரா ..ஆம் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மேலதிகமாய் சொத்துக்குவித்தார் எனும் அடிப்படையில் தான் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது ..1996 ஆம் ஆண்டு போடப்பட்ட முடிச்சு பல நீதிமன்ற அமர்வுகள் தாண்டி நேற்றைய தினமே அவிழ்க்கப்பட்டது ..ஆனாலும் இம்முடிச்சோடு மூழ்கிப்போன உண்மைகள் ஏராளம்
அகிலமே ஆவலோடு பார்த்துக் காத்திருந்த முடிவின் காத்திரத்தன்மை பற்றி இப்பொழுது பல இடங்களில் கேள்வி எழுகின்றது...இம்முடிவு நீதித்துறைக்கு அடிக்கப்பட்ட சாவுமணி எனும் பலதரப்பட்ட விமர்சனங்கள் ஒருபுறம் ...பணம் பதவி எனும் இரு அஸ்திரங்களின் ஆதிக்க கட்டுகைக்குள் சூழ்நிலைக்கைதி ஆகிவிட்டாளா நீதி தேவதை எனும் வெறுப்புணர்வு மறுபுறம் ...எது எவ்வாறாயினும் வழக்கின் தீர்ப்பு வைக்கும் வாதங்களின் தன்மையின் அடிப்படையிலும் காட்டிடும் கடதாசி சாட்சியங்களின் அடிப்படையிலும் எழுதப்படுவதால் தீர்ப்பினை விமர்சித்திடும் உரிமை எமக்கு கிடையாது ..
1991-1996 காலப்பகுதியில் அம்மா அவர்கள் பெற்றிட்ட மாதச்சம்பளம் வெறும் ஒரு ரூபாய் பதவிக்கு வரும் முன் அவரின் சொத்து மதிப்பு 2 கோடி ரூபாய் இப்படி இருக்க எவ்வாறு இவர் 66 கோடி பெறுமதியான சொத்தினை சேர்த்திட்டார் என்பதே இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு. இருப்பினும் நேற்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி அவர்கள் சுட்டிக்காட்டிய விடயங்கள் இவை தான்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.
மேலும், வருமானத்தைவிட 10 வீதத்திற்கும் அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும். ஆனால் ஜெயலலிதா வருமானத்தை விட 8.12 சதவீதம் மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவுதான். எனவே ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளுக்கும், அரசுத் தரப்பு ஆதாரங்களுக்கும் முரண்பாடு உள்ளது.
வருமான வரி தொடர்பான வாதத்தை கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிக் கடன்களை கீழ் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வருமானத்துக்குரிய சான்றிதழ்களை ஜெயலலிதா சமர்ப்பித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்றும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றார்
இதனிடையே இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நீதிபதி குன்ஹா ..ஆம் 18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் திகதி ஜெயலலிதா உட்பட்ட இவ்வழக்கோடு தொடர்புடைய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை வித்திதமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது
மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இதனிடையே நான்கு பேருக்கும் முன்பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என கால வரையறை நிர்ணயித்தது.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 11இல் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இத்தீர்ப்பு நேற்றையதினம் (11-05-2015) வழங்கப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத் தீர்ப்பு மக்களிடையே பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும் ..காலம் உருண்டோடும் ஞாலம் ஆளும் எவனும் வீழும் காலம் வரும் வீரியம் கொண்டு ஆண்டவர் தெய்வத்தின் சந்நிதியில் வீழும் காலமும் வரும் ...விட்டகலா துன்பமும் சேர்ந்து வரும் வீழ்ந்து நிதம் வருந்தும் பல தலைகள் நிதம் அழுந்தும் விதத்தினை பார்க்கும் தேசத்தில் இருந்து இதனைக்கூருகின்றோம் ..நீதி எப்பொழுதும் மரணிப்பதில்லை இது நிதர்சனம்