ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களினால் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்து, தொடர்ந்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தனது X தளத்தில் நடிகர் விஜய் ஆன்டனி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
“ஜனநாயகன் திரைப்படம் இவ்வாறு இணையதளங்களில் வெளியானதை எண்ணி வருத்தமாக இருக்கிறது படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது அனைவரும் சட்டபூர்வமான தளங்கள் வாயிலாகப் பார்த்து ஆதரவளிக்குமாறு மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.