சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, இன்று பெரிய நடிகர்களோடு போட்டி போட்டு முன்னேறி வரும் நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்கிறார். இவரது குறும்புத்தனமான மற்றும் நகைச்சுவை வெளிப்படும் பேச்சும் நடிப்புமே இவருக்கென ஒரு தனிக் கூட்டத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியாகவுள்ள ரஜினி முருகன் எதிர்வரும் ஜீலை 17ஆம் திகதி திரை காண்கிறது. இந்தப் படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளன.
இது இப்படியிருக்க, ரஜினிமுருகன் படத்தில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன், பிச்சை எடுக்கும் ஒரு பெண்மணி தோற்றத்தில் தோன்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் உலா வரும் நிலையில், இது சிவகார்த்திகேயன் தானா என படக்குழு இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-