இது தொடர்பான முறைப்பாடு கடந்த 5 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கைதான சிறுமியின் காதலன் தற்போது சிறுவர் நன்நடத்தை இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை , குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரை விசாரணைகளுக்காக அழைத்துச் சென்ற பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.