பல காலங்களுக்கு முன் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் இன்று வரை ஒரு நிலையான இடத்துக்காக போராடுபவர் ஷாம் . கூட்டத்தில் ஒருவராக நின்ற இவர் 12 B திரைப்படம் மூலம் ஹீரோ ஆனார் . பின்னர் வந்த ஒவ்வொரு படங்களும் இவருக்கு கொஞ்சம் நல்ல பேரை வாங்கிக்கொடுத்தாலும் தவிர்கமுடியாத வெற்றி நாயகன் என்ற நிலையை உருவாக்கவில்லை . இயற்கை என்கிற படத்தின்மூலம் ஷாமுக்கு நல்ல நடிகன் என்ற பெயரை வாங்கிக்கொடுத்த இயக்குனர் S .P ஜனநாதன் மீண்டும் இவருக்கு தான் இயக்கிய புறம்போக்கு படத்தில் இவரை போலீசாக நடிக்கவைத்தார்.
வாய்ப்பை சரியாய் பயன்படுத்திய ஷாம் நடிப்பில் கலக்கியிருந்தார் படமும் நல்ல பெயரை வாங்கியது . இவரது இயல்பான நடிப்பை பார்த்த திரை உலகைச் சார்ந்த பலரும் இவரது நடிப்பை பெரிதும் பாராட்டி வருகின்றனர் .இது போன்ற பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்குமாறும் ஆலோசனை சொல்லியிருக்கின்றனர் .
ஆக... ஷாம் புறம் போக்கால் புதிய பாதைக்கு வந்திருக்கிறார் .
-கந்தப்பன் பிரஷாந்த்